வட்டுவாகல்.கொம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..
alt text

அழகிய எம் கிராமம்

நந்தி ஆற்றினை நடுவினிலே தாங்கி அழகுறச் செழிக்கின்றது வட்டுவாகல் என்ற அழகிய எம் கிராமம்........

alt text

ஆலயம்

வட்டுவாகலின் முத்தாக நந்தியாற்றங்கரையினிலே அமைந்துள்ள திருத்தலமே வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்

alt text

பாடசாலை

எமது கிராமத்தின் பாடசாலையின் பெயர் மு/வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகும்.......

alt text

பாலம்

முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது.. சுமார் 440 மீற்றர் தூரம்......

alt text

விளையாட்டு

எமது கிராமத்தின் விளையாட்டுக் கழகத்தின் பெயர் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் ஆகும்

alt text

செய்திகள்

இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)

alt text

பொங்கல் நிகழ்வுகள்

2016 சப்த கன்னிமார் கோயில் பொங்கலின் இறுதிநாள் நிகழ்வுகள் (வீடியோஇ படங்கள்) ........

alt text

நந்தியாறு கடலுடன் சங்கமம்

மக்கள் நந்தியாறு கடலுடன் கலக்கும் கண்கொள்ளாக்காட்சியைக் காண வட்டுவாகலுக்கு வந்து செல்கின்றனர்.

இடிந்த பிள்ளையார்

உதைபந்தாட்டப் இறுதிப் போட்டி : வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்த வட்டுவாகல் உதயசூரியன்

  • Saturday 3 February 2024
  • by
  •  *வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது வட்டுவாகல் உதயசூரியன்



    இரணைப்பாலை சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தினால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 09பேர் கொண்ட உதைபந்தாட்டப் இறுதிப் போட்டியில்.....
    மேலும் வாசிக்க...

    பிரித்தானிய மண்ணில் உறவுகளுடன் உறவாடிய தருணம் - வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு- படங்கள்

  • Monday 2 October 2023
  • by
  •  உறவுகளுடன் உறவாடும்  ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’ நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

    எமது கிராம மக்களின் ஒற்றுமை மீண்டும் பிரித்தானிய மண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    மேலும் வாசிக்க...

    உறவுகளுடன் உறவாடும் ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’’ - அன்பு அழைப்பு

  • Saturday 30 September 2023
  • by
  •  பிரித்தானிய வட்டுவாகல் உறவுகளுக்கு அன்பு வணக்கங்கள்.

    மிக நீண்ட நாள் நோக்கம் ஒன்றினை நிறைவேற்றும் நெடிய பயணத்தின் ஆரம்பத்தினை உங்கள் வரவேற்புடனும் ஆதரவுடனும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலின் நந்திச்சமர் வெற்றிக்கிண்ணத்தை போராடி வென்றது உடுப்புக்குளம் அலையோசை : படங்கள்.

  • Sunday 6 August 2023
  • by
  •  வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் ம் நடாத்திய மாபெரும் நந்திச்சமர் இறுதிப் போட்டியில் முல்லை உடுப்புக்குளம் அலையோசை போராடி வெற்றிக் கிண்ணத்தைத் தங்கள் வசமாக்கியது.

    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலின் '' *நந்திச்சமர்* " மாபெரும் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப்போட்டி - 2023

  • Monday 10 July 2023
  • by
  •  முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் *கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின்* பேராதரவுடன் *வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்* பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட " *நந்திச்சமர்* " வெற்றிக்கிண்ண மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி - 2023 : 06.07.2023அன்று  உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு  கோலாகலமாக இடம்பெற்றது.


    மேலும் வாசிக்க...

    முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு : அன்பான அழைப்பு

  • Monday 29 May 2023
  • by
  •  


    ஜீவநதியின் 276 வெளியீடான முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு 01.06.2023ம் திகதி வட்டுவாகல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு அன்ரனி சுகிர்தன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
    மேலும் வாசிக்க...

    வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை - படங்கள்

  • Saturday 1 April 2023
  • by
  •   வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளியில் கல்விகற்று தரம் 1 இற்கு மு/ வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் 01.04.2023 இன்று சிறப்பாக நடைபெற்றது.

    தரம் 1இல் காலடி எடுத்துவைக்கும் மாணவார்களின் எதிர்காலம் சிறக்க நல் வாழ்த்துக்கள்.

    அந்நிகழ்வின் சில பதிவுகள்......


    மேலும் வாசிக்க...

    அல்லைக்கிழங்கு: வட்டுவாகல் மண்ணின் அரிய வகை சுவைமிகு இன்னுமொரு வளம்

  • Wednesday 15 March 2023
  • by

  • இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக  மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை  எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.  அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
    மேலும் வாசிக்க...

    கள்ளப்பாடு உதயத்தை எதிர்த்து மகுடம் சூடியது "வட்டுவாகல் உதயசூரியன் அணி'' - படங்கள்

  • Saturday 4 March 2023
  • by
  •  முல்லை உதைபந்தாட்ட லீக்கினால் 35 அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 07பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டித்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் *எமது அணி "இணைபிரியா நட்புறவான" கள்ளப்பாடு உதயம்* அணியினை எதிர்த்து விளையாடி போட்டி நிறைவில் 1:0 கோல்கணக்கில் வெற்றிபெற்று *வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சம்பியன் பட்டத்தினை* பெற்றுக்கொண்டது.

    மேலும் வாசிக்க...

    மகா சிவராத்திரி : மாலைக்கு வாதாடிய மைந்தன் (காத்தவராயன் கூத்து) புராண நாடகம் அரங்கேற்றம் .

  • Sunday 12 February 2023
  • by
  •  மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக சப்த கன்னிமார் ஆலயத்தில் 18/02/2023 அன்று   மாலைக்கு வாதாடிய மைந்தன்  புராண நாடகம் அரங்கேற்றம் செய்ய ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வாசிக்க...

    கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி சபைத் தேர்தல் : போட்டியிடும் வட்டுவாகல் மைந்தன்

  • Saturday 4 February 2023
  • by
  •   முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டு மூலை வடக்கு பிரிவில் போட்டியிடும் வட்டுவாகல் மண்ணின் மைந்தனும் சிறந்த சமூக சேவையாளனுமாகிய திரு சிவராசா செந்தூர்ச்செல்வன்  அவர்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பிரதம வேட்பாளராக துவிச்சக்கர வண்டிச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலில் ஆலய பரிபாலன சபையினால் கும்மி அடித்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு

  • Sunday 15 January 2023
  • by
  •  
    வட்டுவாகல் கிராமத்திற்கே  உரித்தானதும் பாரம்பரியம் ஆனதும்  ஆன கும்மி அடித்தல் நிகழ்வு நாளைய தினம்  ( 16/01/2022 திங்கள் கிழமை) வழமை போன்று நடைபெறும்

             மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வாசிக்க...

    முல்லையில் திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்தது வெட்டுவாய்க்கால் அதக

  • Saturday 24 December 2022
  • by


  • வட்டுவாகல் அதக பாடசாலையானது முல்லை மண்ணில் மற்றொரு திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்துள்ளது. 

    மேலும் வாசிக்க...

    இறுதி அஞ்சலி - Live அமரர் - முருகுப்பிள்ளை முத்தையாதிரு முருகுப்பிள்ளை முத்தையா அவர்கள் (ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்) , வட்டுவாகல் முல்லைத்தீவு

  • Friday 7 October 2022
  • by
  • இறுதி அஞ்சலி -  Live அமரர் - முருகுப்பிள்ளை முத்தையாதிரு முருகுப்பிள்ளை முத்தையா  அவர்கள் (ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்)  , வட்டுவாகல் முல்லைத்தீவு


    மேலும் வாசிக்க...

    கடற்படையின் காணி அளவீட்டு முயற்சி: வட்டுவாகல் மக்களின் எதிர்ப்பால் இடை நிறுத்தம்!

  • Wednesday 8 June 2022
  • by

  •  முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ்மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி 07.06.2022 இன்று காணிகளுக்குரிய பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
    மேலும் வாசிக்க...

    ''மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம்'' உதயசூரியன் வசம்: வட்டுவாகலிடம் வீழ்ந்தது அளம்பில்

  • Sunday 10 April 2022
  • by
  •  




    மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிணத்திற்கான உதைபந்தாட்டப் போடிட்கள் செம்மலை  விளையாட்டுக் கத்ததால் நடாத்தப்பட்டது
    மேலும் வாசிக்க...

    புதிய சீருடையுடன் '' மண்ணின் மைந்தர்கள் ''இறுதிப் போட்டியில் வட்டுவாகல் : அளம்பிலுடன் பலப்பரீட்சை

  • Friday 8 April 2022
  • by
  • 09.04.2022 நாளை  "மண்ணின் மைந்தர்கள்"  மாபெரும் வெற்றிக்கிண்ணத்தின்  இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழக மானது அளம்பில் இளந்தென்றலுடன் புதிய சீருடையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    மேலும் வாசிக்க...

    போட்டி மனப்பாங்கு அதிவேகம்: இளம் ஆசிரியரைப் பலியெடுத்த வட்டுவாகல் விபத்து

  • Tuesday 22 March 2022
  • by
  •  
    முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளார்கள்.

    இவ் விபத்து சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.

    விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    விபத்தின் போது காயமடைந்தவர்கள் சிலர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஏட்டிக்கு போட்டியாக பேருந்தினை ஓட்டிவந்தமையாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக காயமடைந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

    விபத்துக்குள்ளான பேருந்தினை முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள்.

    அத்துடன், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

    கைது செய்யப்பட்ட சாரதி மருத்துவ சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

    மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    மேலும் வாசிக்க...

    வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்கள் அன்பளிப்பு

  • Thursday 27 January 2022
  • by
  • கனடாவிலிருந்து வருகை தந்த திரு முகுந்தன் திலக்சி ஆகியோர்களினால் இன்று  மு/வெட்டுவாய்க்கால் பாடசாலைக்கு பாடசாலை உபகரணப்பொருட்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

    மேலும் வாசிக்க...

    இளையோருக்கு உதைபந்தாட்டக் காலணிகள் வழங்கி வைப்பு: பிரான்ஸ் ஒன்றியம் (படங்கள்)

  • Tuesday 25 January 2022
  • by
  •  இன்றைய தினம் எமது உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின்  எதிர்கால இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 12 - 15 வயதிற்குட்பட்ட  சிறுவர்களுக்கான 14 சோடி உதைபந்தாட்டக் காலணிகள் ""வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றியத்தின்"" நிதி அனுசரனையுடன் கழகம் சார்பாக  மைதானத்தில் வழங்கப்பட்டது. 

    மேலும் வாசிக்க...

    பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பரிசில்களைப் பெற்ற வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை

  • Tuesday 18 January 2022
  • by
  • பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றிஇ கடந்த 2022-01-05ம் திகதி கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசில்களைப் பெற்றுக் கொண்ட வட்டுவாகல் சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பெயர் விபரங்கள் 

    பாலர் பிரிவு- கையெழுத்துப் போட்டி
              றஐுவ்-மேனகா (2ம் இடம்)

    சிறுவர் பிரிவு- கையெழுத்துப் போட்டி 
              சுதன்- குயின்சினி (1ம் இடம்)

    சிறுவர் பிரிவு- கவிதைப் பாடல் போட்டி
               சுதன்- குயின்சினி(1ம் இடம்)

    மத்திய பரிவு- கவிதைப் பாடல் போட்டி
            பாபு-நேருஐா (3 ம் இடம்)
            வசீகரன்-பிரியங்கா(3ம்இடம்)

    மத்திய பிரிவு- கவிதை எழுதுதல் போட்டி
           பாபு-நேருஐா (1ம்இடம்)
           வசீகரன்-பிரியங்கா (2ம் இடம்)

     ஆறுதல் பரிசுகளைப் பெற்றுக் கொண்டவர்கள்
         பாலர் பிரிவு 
                   அ.டிஐானா (81புள்ளி)
                    ந.டனுசா (56புள்ளி )

       சிறுவர் பிரிவு
                    சு.சனுஸ்கா (86புள்ளி)
                    தி.திசாளினி (84புள்ளி)
                    பா.சனோஐித் (70புள்ளி)
                    சி.கன்சிகா (68 புள்ளி)
                    தீ.மிருசன் (68புள்ளி)


    பெற்றோர்களே!
       உங்கள் பிள்ளைகளைத் தவறாது அறநெறிக்கு அனுப்பி வையுங்கள்.
     "பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்"

                    நன்றி

                                 பொறுப்பாசிரியர்.

    பரிசளிப்பு விழாவின் பதிவுகள் சில.
    மேலும் வாசிக்க...

    கடும் மழை : முகத்துவாரம் தானாக உடைத்து பாய்கின்றது நந்தி ஆறு

  • Tuesday 9 November 2021
  • by

  •  நேற்றிலிருந்து பெய்த கடும்  மழை காரணமாக வட்டுவாகல் முகத்துவாரம் தானாக உடைத்து இன்று நள்ளிரவில் இருந்து   நந்தி  ஆறு கடலுடன் சங்கமிக்கின்றது.

    அதிக மழையினால் சடுதியாக நீர்மட்டம் அதிகரித்ததனாலேயே ஆறு தானாக உடைப்பெடுத்து பாய்கின்றது. 

    மேலதிக விபரங்கள் , படங்கள் தரவேற்றப்படும்

    மேலும் வாசிக்க...

    5பில்லியன் ரூபாய்கள் செலவில் வட்டுவாகல் பாலம் விரைவில் நிர்மாணிப்பு: பா உ திரு சுரேன்ராகவன்

  • Tuesday 26 October 2021
  • by

  • முல்லைத்தீவு வட்டுவாகல் புதிய பாலம் விரைவில் நிர்மாணிக்கப் படுமாம். சுமார் 5பில்லியன் ரூபாய்கள் செலவாகலாம் என உத்தேசம்.பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் தெரிவிப்பு!

    அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.

    பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு

    மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.

    நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.

    அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.

    எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.

    புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று

    வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும்  வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.

    இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன். 

    நன்றி.

    பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.


    இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி  05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது


    https://www.vadduvakal.com/2020/01/blog-post.html








    மேலும் வாசிக்க...

    புதிதாக கட்டப்பட்ட நாக கன்னிகள் ஆலய கும்பாபிசேகம் : படங்கள்

  • by
  •  வட்டுவாகலில் அமைந்துள்ள நாக கன்னிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு கடந்த இரு நாட்களாக கும்பாபிசேகம் நடைபெற்று வருகின்றது. 

    மேலும் வாசிக்க...

    கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்

  • Sunday 24 October 2021
  • by
  • முல்லைத்தீவு வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட **விளாவூர் யுத்தம்** உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துள்ளது.
    மேலும் வாசிக்க...

    வெளி மாவட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடரின் முதல் போட்டியில் உதயசூரியன் வெற்றி

  • Saturday 23 October 2021
  • by

  • வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக வெளி மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றியது.
    மேலும் வாசிக்க...

    புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்

  • Friday 22 October 2021
  • by



  • புதிதாக கட்டப்பட்ட  வட்டுவாகலில் அமைந்துள்ள  நாக கன்னிகள் ஆலயத்தில் நாளை ‘கும்பாபிசேகம்’ நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
    மேலும் வாசிக்க...

    சப்தகன்னியர் பக்திப் பாடல்கள்

    பாடியவர் ரகுநாதன் பாடியவர் SGசாந்தன்

    முக்கிய தளங்கள்

    தமிழில் தட்டச்சு

    எழுதமிழா

    விளம்பரத் தொடர்புகள்

    எழுதமிழா
    எழுதமிழா

    அதிகம் வாசிக்கப்பட்டவை