வட்டுவாகல்.கொம்: இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)

Posted on
  • செவ்வாய், 19 ஏப்ரல், 2016
  • by
  • in
  • வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் இராஜ கோபுரத்துக்கான அத்திவாரப்பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயமாக ஒரு பானை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 11 அடி ஆழத்திற்குத் தோண்டும் போதே இவ் வரலாற்றுத் தடயம் கண்டுபிடிக்கப்பட்டது. 

    இது எவ்வகைக் காலத்தைச் சேர்ந்தது என்பதை அறிவதற்காக இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்திடமும், பல்கலைக்கழக தொல்லியல் சார் அறிஞர்களிடமும் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளதாக கிராமத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.