முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் நீர் நிறைந்து காணப்பட்டது இந்நிலையில் நேற்று முந்தினம் மாலை மேலதிக நீரினை கடலுடன் சங்கமிக்க வைப்பதற்காக பெருங்கடலுக்கும் நந்தி ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பினை வெட்டி கடலையும் ஆற்றையும் இணைத்து வாய்க்கால் அமைக்கப்பபட்டு மேலதிக நீர் கடலுக்குள் விடப்பட்டது
இந்நிலையில் கடும்மழை காரணமாக வட்டுவாகல் பாலத்தினூடாக நீர் அலைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது, இந்நிலையில் வடமாகாணம் உள்ளிட்ட பல பாகங்களை உலுக்கிய கடும்மழையினால் ஏற்பட்பட்ட வெள்ளநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களிலிருந்து மக்கள் நந்தியாறு கடலுடன் கலக்கும் கண்கொள்ளாக்காட்சியைக் காண வட்டுவாகலுக்கு வந்து செல்கின்றனர்.