வட்டுவாகல்.கொம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..
alt text

அழகிய எம் கிராமம்

நந்தி ஆற்றினை நடுவினிலே தாங்கி அழகுறச் செழிக்கின்றது வட்டுவாகல் என்ற அழகிய எம் கிராமம்........

alt text

ஆலயம்

வட்டுவாகலின் முத்தாக நந்தியாற்றங்கரையினிலே அமைந்துள்ள திருத்தலமே வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்

alt text

பாடசாலை

எமது கிராமத்தின் பாடசாலையின் பெயர் மு/வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகும்.......

alt text

பாலம்

முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது.. சுமார் 440 மீற்றர் தூரம்......

alt text

விளையாட்டு

எமது கிராமத்தின் விளையாட்டுக் கழகத்தின் பெயர் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் ஆகும்

alt text

செய்திகள்

இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)

alt text

பொங்கல் நிகழ்வுகள்

2016 சப்த கன்னிமார் கோயில் பொங்கலின் இறுதிநாள் நிகழ்வுகள் (வீடியோஇ படங்கள்) ........

alt text

நந்தியாறு கடலுடன் சங்கமம்

மக்கள் நந்தியாறு கடலுடன் கலக்கும் கண்கொள்ளாக்காட்சியைக் காண வட்டுவாகலுக்கு வந்து செல்கின்றனர்.

சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு - படங்கள்

  • செவ்வாய், 2 செப்டம்பர், 2025
  • by

  • வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்  கௌரவ  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால்  இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


    ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க  ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு  விஜயம் செய்துள்ளார் .

    நாட்டின் மேன்மைதங்கிய  ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று(02)  முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து காலை புதுக்குடியிருப்பில்  தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில்  நண்பகல் 1.00 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

    மிகநீண்டகால கோரிக்கையாக இருந்த  வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்க வந்த ஜனாதிபதி அவர்களை  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் வரவேற்றிருந்தார்.

    தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

    இந்த  நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் கௌரவ  பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கௌரவ  சந்திர சேகரம், பிரதி அமைச்சர்  கௌரவ உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலகநாதன், ஜெகதீஸ்வரன்,ரவிகரன்  மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











    மேலும் வாசிக்க...

    வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடல் : அனர்த்த முகாமைத்துவ பிரிவு

  • செவ்வாய், 15 ஜூலை, 2025
  • by

  •  வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.

    எனவே, அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, முல்லைத்தீவு
    மேலும் வாசிக்க...

    முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் இரவு பூசை நேரலை

  • திங்கள், 7 ஜூலை, 2025
  • by
  •  


    முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் மதிய பூசை நேரலையினை இந்த இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும் என்பதை உலக சப்த கன்னிமார் அடியார்களுக்கு அன்பாக அறியத்தருகின்றோம்.



    https://www.youtube.com/watch?v=x8dT2j2qv8I



    மேலும் வாசிக்க...

    முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 ஏழாம் நாள் இரவு பூசை நேரலை

  • ஞாயிறு, 6 ஜூலை, 2025
  • by
  •  


    முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 ஏழாம் நாள் இரவுப் பூசை நேரலையினை இந்த இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும் என்பதை உலக சப்த கன்னிமார் அடியார்களுக்கு அன்பாக அறியத்தருகின்றோம். 

    நன்றி.

    JJ Live வட்டுவாகல்

    https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU

    Please click Hire

    https://www.youtube.com/live/dG2pDbUCkwU


    https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU





     
    மேலும் வாசிக்க...

    புதுவருடக் கிண்ணம் உதயசூரியன் வசம் : வட்டுவாகலிடம் வீழ்ந்தது இரணைப்பாலை: படங்கள் & வீடியோ

  • செவ்வாய், 15 ஏப்ரல், 2025
  • by
  •  வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் முல்லைத்தீவு உதைபந்ட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்மதியுடன் அணிக்கு 11 பேர் கொதாட்ட சம்மேளத்தின் அனுயிலான மாபொரும் உதைபந்தாண்ட விலகல் முறைபோட்டி வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

    மேலும் வாசிக்க...

    வட்டுவாகல் பிரான்ஸ் உறவுகளின் அனுசரணையுடன் முல்லைக் கடற்கரையில் பட்டத்திருவிழா - படங்கள்

  • ஞாயிறு, 19 ஜனவரி, 2025
  • by
  • முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025இன்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

    பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.


    அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
    அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
    இந் நிலையில் சிறார்கள் முதல் பெரியோர்வரை இணைந்து இந்தப் பட்டம்விடும் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.


    அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையெங்கும் அழகிய வண்ணப்பட்டங்கள் வானை அலங்கரித்தன.

    மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திருமதி.இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















    மேலும் வாசிக்க...

    கொழும்பில் வட்டுவாகல் சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி எழிலினிக்கு விருது : படங்கள்

  • ஞாயிறு, 22 டிசம்பர், 2024
  • by
  • தேசிய ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபம்  நேற்று 21.12.2024 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது    எமது வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி ''லோகேஸ்வரன் எழிலினி'' அவர்கள் சாதனை புரிந்து சான்றிதழையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.


    மேலும் வாசிக்க...

    2024 பாதீட்டு நிதியில் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ சப்த கன்னிமார் அறநெறிக்குத் தளபாடங்கள் அன்பளிப்பு

  • ஞாயிறு, 8 டிசம்பர், 2024
  • by
  • *

             2024 பாதீட்டு நிதியில் எமது சப்த கன்னிமார் அறநெறி பாடசாலைக்கு உதவும் படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரியிருந்தோம்.



    அவர்களுள் முந்நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு ஒன்றரை இலட்சம் (150000/=) ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகம் ஊடாக எமக்கு வழங்கியுள்ளார். 



    அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைப் பாடசாலையின் சார்பாகவும் எமது மாணவர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்
    மேலும் வாசிக்க...

    திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை , வட்டுவாகலில் புதிய பாலம் : பிரதிஅமைச்சர் உபாலி உறுதி?

  • வெள்ளி, 29 நவம்பர், 2024
  • by
  •  திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி; புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு





    மேலும் வாசிக்க...

    தேசிய ஆக்கத்திறன் போட்டி , இலக்கிய விழா சாதனைகள் : வட்டுவாகல் அறநெறி மாணவர்கள்

  • ஞாயிறு, 10 நவம்பர், 2024
  • by
  •  *தேசிய ஆக்கத்திறன் போட்டி*


    கடந்த 09-12-2023 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற 2022-2023 ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் எமது சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி *செல்வி லோகேஸ்வரன் - எழிலினி* அவர்கள் எழுத்தாற்றலில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக் தெரிவாகியுள்ளார்.



    மேலும் வாசிக்க...

    உலக அளவிலான கராத்தே போட்டி 2024 (WUMS Champions - London) : பிரித்தானிய வட்டுவாகல் போட்டியாளர்கள் சாதனை

  • by
  •  வட்டுவாகலைச் சேர்ந்த சுபாஸ்கரன், மனைவி றஜினி யின் பிள்ளைகளான மகள் சுவேதிகாவும், மகன் கிரிகரனும் 2024 ஆண்டுக்கான உலகளவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் (WUMS Champions - London) லண்டனில் இருந்து தெரிவாகி உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மேலும் வாசிக்க...

    சிலாவத்தையில் மகுடம் சூடியது வட்டுவாகல் உதயசூரியன் அணி 🏆🏆🏆

  • வியாழன், 31 அக்டோபர், 2024
  • by
  •  🚩சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக்கழகம் 🕊️♻️முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளத்தின் அனுமதியுடன் வருடம் தோறும் பெருமையுடன் நடாத்தும் அமரர்களான வேலுப்பிள்ளை சோமசுந்தரம், கந்தசாமி பிரபாகரன் ஞாபகார்த்த சோ.சோமபாஸ்கரன் அவர்களின் நிதி அனுசரனையில் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 31.10.2024 இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் அணியை எதிர்த்து உடுப்புக்குளம் அலை ஓசை அணி் மோதினார்கள் ஆட்ட நேர முடிவில் பல சவாலுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு எமது அணியினர் விளையாடினார்கள் . 

    மேலும் வாசிக்க...

    உதைபந்தாட்டப் இறுதிப் போட்டி : வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்த வட்டுவாகல் உதயசூரியன்

  • சனி, 3 பிப்ரவரி, 2024
  • by
  •  *வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது வட்டுவாகல் உதயசூரியன்



    இரணைப்பாலை சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தினால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 09பேர் கொண்ட உதைபந்தாட்டப் இறுதிப் போட்டியில்.....
    மேலும் வாசிக்க...

    பிரித்தானிய மண்ணில் உறவுகளுடன் உறவாடிய தருணம் - வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு- படங்கள்

  • திங்கள், 2 அக்டோபர், 2023
  • by
  •  உறவுகளுடன் உறவாடும்  ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’ நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் வாசிக்க...

    உறவுகளுடன் உறவாடும் ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’’ - அன்பு அழைப்பு

  • சனி, 30 செப்டம்பர், 2023
  • by
  •  பிரித்தானிய வட்டுவாகல் உறவுகளுக்கு அன்பு வணக்கங்கள்.

    மிக நீண்ட நாள் நோக்கம் ஒன்றினை நிறைவேற்றும் நெடிய பயணத்தின் ஆரம்பத்தினை உங்கள் வரவேற்புடனும் ஆதரவுடனும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலின் நந்திச்சமர் வெற்றிக்கிண்ணத்தை போராடி வென்றது உடுப்புக்குளம் அலையோசை : படங்கள்.

  • ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
  • by
  •  வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் ம் நடாத்திய மாபெரும் நந்திச்சமர் இறுதிப் போட்டியில் முல்லை உடுப்புக்குளம் அலையோசை போராடி வெற்றிக் கிண்ணத்தைத் தங்கள் வசமாக்கியது.

    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலின் '' *நந்திச்சமர்* " மாபெரும் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப்போட்டி - 2023

  • திங்கள், 10 ஜூலை, 2023
  • by
  •  முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் *கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின்* பேராதரவுடன் *வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்* பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட " *நந்திச்சமர்* " வெற்றிக்கிண்ண மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி - 2023 : 06.07.2023அன்று  உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு  கோலாகலமாக இடம்பெற்றது.


    மேலும் வாசிக்க...

    முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு : அன்பான அழைப்பு

  • திங்கள், 29 மே, 2023
  • by
  •  


    ஜீவநதியின் 276 வெளியீடான முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு 01.06.2023ம் திகதி வட்டுவாகல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு அன்ரனி சுகிர்தன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
    மேலும் வாசிக்க...

    வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை - படங்கள்

  • சனி, 1 ஏப்ரல், 2023
  • by
  •   வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளியில் கல்விகற்று தரம் 1 இற்கு மு/ வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் 01.04.2023 இன்று சிறப்பாக நடைபெற்றது.

    தரம் 1இல் காலடி எடுத்துவைக்கும் மாணவார்களின் எதிர்காலம் சிறக்க நல் வாழ்த்துக்கள்.

    அந்நிகழ்வின் சில பதிவுகள்......


    மேலும் வாசிக்க...

    அல்லைக்கிழங்கு: வட்டுவாகல் மண்ணின் அரிய வகை சுவைமிகு இன்னுமொரு வளம்

  • புதன், 15 மார்ச், 2023
  • by

  • இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக  மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை  எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.  அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
    மேலும் வாசிக்க...

    கள்ளப்பாடு உதயத்தை எதிர்த்து மகுடம் சூடியது "வட்டுவாகல் உதயசூரியன் அணி'' - படங்கள்

  • சனி, 4 மார்ச், 2023
  • by
  •  முல்லை உதைபந்தாட்ட லீக்கினால் 35 அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 07பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டித்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் *எமது அணி "இணைபிரியா நட்புறவான" கள்ளப்பாடு உதயம்* அணியினை எதிர்த்து விளையாடி போட்டி நிறைவில் 1:0 கோல்கணக்கில் வெற்றிபெற்று *வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சம்பியன் பட்டத்தினை* பெற்றுக்கொண்டது.

    மேலும் வாசிக்க...

    மகா சிவராத்திரி : மாலைக்கு வாதாடிய மைந்தன் (காத்தவராயன் கூத்து) புராண நாடகம் அரங்கேற்றம் .

  • ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023
  • by
  •  மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக சப்த கன்னிமார் ஆலயத்தில் 18/02/2023 அன்று   மாலைக்கு வாதாடிய மைந்தன்  புராண நாடகம் அரங்கேற்றம் செய்ய ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வாசிக்க...

    கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி சபைத் தேர்தல் : போட்டியிடும் வட்டுவாகல் மைந்தன்

  • சனி, 4 பிப்ரவரி, 2023
  • by
  •   முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டு மூலை வடக்கு பிரிவில் போட்டியிடும் வட்டுவாகல் மண்ணின் மைந்தனும் சிறந்த சமூக சேவையாளனுமாகிய திரு சிவராசா செந்தூர்ச்செல்வன்  அவர்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பிரதம வேட்பாளராக துவிச்சக்கர வண்டிச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

    மேலும் வாசிக்க...

    வட்டுவாகலில் ஆலய பரிபாலன சபையினால் கும்மி அடித்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு

  • ஞாயிறு, 15 ஜனவரி, 2023
  • by
  •  
    வட்டுவாகல் கிராமத்திற்கே  உரித்தானதும் பாரம்பரியம் ஆனதும்  ஆன கும்மி அடித்தல் நிகழ்வு நாளைய தினம்  ( 16/01/2022 திங்கள் கிழமை) வழமை போன்று நடைபெறும்

             மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வாசிக்க...

    முல்லையில் திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்தது வெட்டுவாய்க்கால் அதக

  • சனி, 24 டிசம்பர், 2022
  • by


  • வட்டுவாகல் அதக பாடசாலையானது முல்லை மண்ணில் மற்றொரு திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்துள்ளது. 

    மேலும் வாசிக்க...

    இறுதி அஞ்சலி - Live அமரர் - முருகுப்பிள்ளை முத்தையாதிரு முருகுப்பிள்ளை முத்தையா அவர்கள் (ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்) , வட்டுவாகல் முல்லைத்தீவு

  • வெள்ளி, 7 அக்டோபர், 2022
  • by
  • இறுதி அஞ்சலி -  Live அமரர் - முருகுப்பிள்ளை முத்தையாதிரு முருகுப்பிள்ளை முத்தையா  அவர்கள் (ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்)  , வட்டுவாகல் முல்லைத்தீவு


    மேலும் வாசிக்க...

    கடற்படையின் காணி அளவீட்டு முயற்சி: வட்டுவாகல் மக்களின் எதிர்ப்பால் இடை நிறுத்தம்!

  • புதன், 8 ஜூன், 2022
  • by

  •  முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ்மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி 07.06.2022 இன்று காணிகளுக்குரிய பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
    மேலும் வாசிக்க...

    சப்தகன்னியர் பக்திப் பாடல்கள்

    பாடியவர் ரகுநாதன் பாடியவர் SGசாந்தன்

    முக்கிய தளங்கள்

    தமிழில் தட்டச்சு

    எழுதமிழா

    விளம்பரத் தொடர்புகள்

    எழுதமிழா
    எழுதமிழா

    அதிகம் வாசிக்கப்பட்டவை