வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தில் புதுவருட தினத்தன்று சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது. அதிகாலையிலே வழக்கம் போல பக்தர்களுக்கு மருத்துநீர் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஆலயத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களுக்கும் பாலாபிசேகம் உட்பட அனைத்து அபிசேகங்களும் இடம்பெற்று பூசைக்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூசை ஆலய பூசார்களால் நடைபெற்றது. அதன்போது விசேடமாக எம் கிராமத்திற்கு நன்மை வேண்டி அம்மனுக்கு நேர்த்திக் கடன்களும் செய்யப்பட்டன.
நிறைவில் வருகை தந்த பக்தர்களுக்கு புதுவருட பலன்கள் தொடர்பாகவும் ,பரிகாரங்களுக்கான வழிகளும் ஆலய பூசகரினால் கூறப்பட்டது. தொடர்ந்து இறுதியாக அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.