வட்டுவாகல்.கொம்: வறுமையைப் போக்க வெளிநாடு செல்லும் வழியில் உயிர்நீத்த எம் உறவு காண்டீபன்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வறுமையைப் போக்க வெளிநாடு செல்லும் வழியில் உயிர்நீத்த எம் உறவு காண்டீபன்

Posted on
  • செவ்வாய், 26 ஏப்ரல், 2016
  • by
  • in

  • யுத்தத்தின் கோரத்தால் வடகிழக்கில் பல குடும்பங்கள் மீள எழ முடியாமல் தவிர்த்து வருகின்றனர். அதிலும் புலம்பெயர் நாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்காத குடும்பங்களின் நிலை மிக மோசமாக உள்ளது. இதனால் பலரது குடும்ப வறுமையை போக்கப் பல இளைஞர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல உயிரையும் பணயம் வைக்கின்றனர்.

    இவ்வாறே வட்டுவாகலைச் சேர்ந்த திரு நா.காண்டீபனும் தனது உயிரை மாய்த்திருக்கின்றார். சில முகவர்களின் தவறான வழிநடாத்தலே இச்சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன .இவ்வாறான பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.


    திரு நா.காண்டீபனின் குடும்பத்தாருக்கு நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
    அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக