வட்டுவாகல்.கொம்: துருக்கியில் கொல்லப்பட்ட வட்டுவாகல் இளைஞனின் தாயாரும் அதிர்ச்சியில் மரணம் (படம்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

துருக்கியில் கொல்லப்பட்ட வட்டுவாகல் இளைஞனின் தாயாரும் அதிர்ச்சியில் மரணம் (படம்)

Posted on
  • செவ்வாய், 26 ஏப்ரல், 2016
  • by
  • in
  • நேற்று முன்தினம் துருக்கியில் கொல்லப்பட்ட வட்டுவாகல் இளைஞனான திரு காண்டீபனின் தாயாரான நா.புவனேஸ்வரி / தங்கமுத்து 65 வயது அவர்கள் மகனின் துயரம் கேட்டவுடனே அதிர்ச்சியடைந்து திடீரென மயக்கமடைந்துள்ளார். உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

    இறுதிக்கிரியைகள் நாளை 27.04.2016 பி.ப 2 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஒரே நேரத்தில் இருவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.