வட்டுவாகல்.கொம்: சரஸ்வதி சிலைக்கான அத்திவாரமிடலும், பாடசாலை உபாரணங்கள் கையளிப்பும் (படங்கள்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

சரஸ்வதி சிலைக்கான அத்திவாரமிடலும், பாடசாலை உபாரணங்கள் கையளிப்பும் (படங்கள்)

Posted on
  • திங்கள், 6 ஜூன், 2016
  • by
  • in
  • Tags
  • வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சரஸ்வதி சிலைக்கான அத்திவாரமிடல் நிகழ்வும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வும் இன்றைய தினம் வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
    வெட்டுவாய்க்கால் பாடசாலை அதிபர்  திரு.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி உதயராணி முனீஸ்வரன் அவர்களும் ,  சிறப்பு  விருந்தினர்களாக கோட்டக்கல்வி அதிகாரி திரு புஸ்பகாந்தன் , பாடசாலைத் திட்டமிடல் அதிகாரி திரு நவநீதன், அளம்பில் பாடசாலை  அதிபர் திரு அல்பிரட், முள்ளிவாய்க்கால் பாடசாலை அதிபர் திரு மாசிலாமணி, முல்லை ம.வி சார்பாக ஆசிரியர் திரு சிவகுமார், சிலாவத்தை பாடசாலை சார்பாக ஆசிரியர் திரு கிருபா ஆகியோருடன்  வட்டுவாகல் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் வட்டுவாகல் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

    சரஸ்வதி சிலையினை நிறுவும் முழுச் செலவும் வட்டுவாகலைச் சேர்ந்த திரு நாகேந்திரம் சுகந்தன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது. அவர்களுக்குப் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும். 



    தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது. இக்கற்றல் உபகரணங்கள் வட்டுவாகலைச் சேர்ந்த தற்போது புலம் பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் திரு வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  அவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்