வட்டுவாகல்.கொம்: பொங்கல் மறுதினம் குளிர்த்தி வழங்கலும் பொருட்கள் ஏலம் விடப்பட்ட நிகழ்வும் (படங்கள் , வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பொங்கல் மறுதினம் குளிர்த்தி வழங்கலும் பொருட்கள் ஏலம் விடப்பட்ட நிகழ்வும் (படங்கள் , வீடியோ)

Posted on
  • செவ்வாய், 21 ஜூன், 2016
  • by
  • in
  • வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் ஆலயத்தில் தொன்றுதொட்டுப் பல நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பொங்கல் முடிந்தபின் பொருட்கள் ஏலம் விடும் நிகழ்வு இடம்பெறும். ஆலயத்துக்குப் பக்த அடியார்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பல பெறுமதியான பொருட்கள் முதற்கொண்டு அத்தியாவசிய அன்றாடப் பொருட்களும் ஏலம் விடப்படுதல் வழமையானது. யார் கூடிய விலை கோருகின்றார்களோ அவர்கள் பணத்தைச் செலுத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


    பொங்கல் மறுதினமான இன்று புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெறுகின்றமையும் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.



    குளிர்த்தி
    பொங்கல் நிறைவடைந்து மறுதினம் குளிர்த்தி எனப்படும் ஒருவகை விசேட பிரசாதம் அம்மனுக்குப் படைக்கப்பட்டுப் பக்த அடியார்களுக்கு வழங்கப்படும். இக் குளிர்த்தியானது பச்சையான (அவிக்காத, வறுக்காத) அரிசி மா மற்றும் சர்க்கரை, தேன போன்ற பொருட்களை உள்ளடக்கி உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.