முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கென 617 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பகுதியினை அளவீடு செய்வதற்கு நிலஅளவைத் திணைக்களம் முடிவெடுத்துள்ளதை அடுத்து வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கின் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டுவாகல் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன், வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு ம.அன்ரனிஜெகநாதன் , வடமாகாண சபை உறுப்பினர் திரு து.ரவிகரன் தலைமையில் வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதனால் கடற்படையினருக்கான காணி அளவீடு கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது.
(மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் தரவேற்றப்படும்)
(2ம் இணைப்பு)
(2ம் இணைப்பு)
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு நிலஅளவையாளார்களை திரும்பி செல்லுமாறும் இது தமது புர்விக நிலமெனவும் கோரியதற்கமைய நில அளவைப்பணிகள் கைவிடப்பட்டது அதேவேளை மவாட்ட அரசாங்க அதிபர் வருகைதந்து, இனிமேல் காணி அளவீடு மேற்கொள்ள அனுமதி வழங்கபோவதில்லை என உறுதி மொழி தரவேண்டும்என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கைவிடுத்து வீதியின் நடுவே அமர்ந்து கொண்டதால் அப்பகுதியின் போக்குவரத்துக்கள் அனைத்தும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டது .
இதனைத்தொடர்ந்து மாவவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்துகொண்டிருப்பதாகவும் அவர் மக்களிடம் சென்று நிலமையை விசாரிக்குமாறு தம்மை அனுப்பியதாகவும் தெரிவித்தேபோது மக்கள் இதற்கு முன்னரும் இக்காணியை அளவீடு செய்யவந்தபோது மக்கள் கூடி நில அளவிட்டை நிறுத்தி இது எமது பாட்டன் புட்டன் முப்பாட்டன் கால சொத்து இது எமது வாழ்வாதார பிரச்சினை எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த நில உரிமையாளராக நாம் இருக்கிறோம் அப்படி இருக்கும்போது இதனை இரானுவத்துக்கு எவ்வாறு வழங்குவீர்கள் என தடுத்து நிறுத்தி தங்களுக்கும் எமது ஆவணங்களை வழங்கினோம் அப்பிடியிருந்தும் இன்றும் எமது காணியை இரானுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகிறது இதனை தடுத்து நிறுத்தி எமது நிலங்களை எம்மிடம் தாருங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டது
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட செயலக அதிகாரி தாம் பெற்றுக்கொண்ட மகஜரை மாவட்ட செயலாளரிடம் சமர்ப்பித்து ஜனாதிபதி அவர்களுக்கு இதனை சமர்ப்பிப்பதாகவும் உறுதியளித்ததை அடத்து மக்கள் அங்கிருந்து கலைந்த சென்றனர் இந்த ஆார்ப்பாட்டமானது இன்று(03) காலை 8.30 மணிக்கு வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து அங்கிருந்து கோத்தபாய முகாம் வாயிலில் மக்கள் முற்றுகையிட்டு நில அளவையாளர்களை திருப்பி அனுப்பியபின்னர் மாவட்ட செயலாளரின் வருகைக்காக பாலத்தில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது போராட்டத்திலீடுபட்ட மக்கள் அரச அதிகாரிகளே இரானுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர்கள் எமது உரிமைகள் எமக்கு வேண்டும் பறிப்பதற்கு ஒருபோதும் இடமளியோம் பறிக்கப்பட்ட மண்ணும் உரிமையும் எமக்கு வேண்டும் நமது மண் நமக்கு வேண்டும் இரானுவமே வெளியேறு உள்ளிட்ட பல வாசகங்களை தாங்கிய பாதாதைகளோடு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர் .
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, மற்றும் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்
இவர்களும் நல்லாட்ச்சி அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இந்த நடவடிக்கை தொடரக்கூடாது எனவும் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களுக்கு சரியான தொரு தீர்வு வழங்கப்படவேண்டும் அப்போது தான் நல்லாட்சியாக அமையும் எனவும் இவ்வாறான நல்லாடச்சியின் கொள்கைகள் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
Thanks : IBC Tamil