வட்டுவாகல்.கொம்: காணி அளவீடு - மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் (படங்கள்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

காணி அளவீடு - மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் (படங்கள்)

Posted on
  • வியாழன், 1 செப்டம்பர், 2016
  • by
  • in
  • வட்டுவாகல் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைக்காக மிகப் பிராயத்தன நடவடிக்கைகள் கடற்படையினாரல் மேற்கொள்ளப்படுகிறது.
    இதுதொடர்பில் நில அளவையாளர் பா.நவஜீவன் அவர்களின் 25.08.2016 இல் அறிவிப்புக் கடிதம் வெளியிடப்பட்டது. இந்நடவடிக்கை பிரதேச மக்களின் எதிர்ப்பினாலும், தமிழ் அரசியல் தலைமைகளது எதிர்ப்பினாலும் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு இன்றைய தினம் முல்லைத்தீவு அரச அதிபர் பணிமனையில் இடம்பெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
    அதனடிப்படையில் இன்று முல்லைத்தீவு அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வன்னிமாவட்ட பாரளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்களுடன் அரச அதிகாரிகள் , பிரசேச மக்கள் , கடற்படையினர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

    இறுதியில் வட்டுவாகலில் காணி அளவு செய்தல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் கூடி தீர்மானிக்கும்வரை அளவிடமுடியாது என தீர்மானம் மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. 

    மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் தரவேற்றப்படும்