வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் பாலத்தை முற்றுகையிட்டு அணிவகுத்த கடற்படை
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் பாலத்தை முற்றுகையிட்டு அணிவகுத்த கடற்படை

Posted on
  • சனி, 10 செப்டம்பர், 2016
  • by
  • in

  • முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கை கடற்படையினர் கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் நுளைந்துள்ளனர்.
    இன்று காலை 10.00 மணியளவில்; முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணிஅணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர்.
    குறித்த கடற்படையினருக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினரின் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதாற்காகவும் கோத்தாபாய கடற்படை முகாமுக்கு சென்றுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.