கடந்த 26.09.2016 அன்று தன் வயதினையொத்த நண்பர்களுடன்நந்தியாற்றில் விளையாடியவேளை பரிதாபமாக நீரில்மூழ்கிப் பலியான வட்டுவாகலைச் சேர்ந்த பிரபாபரன் நந்தினி தம்பதியரின்புதல்வனான சர்மிரனின் இறுதி நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
தாளாத சோகத்துடன் முழுக்கிராமமுமே அப்பாலகனுக்கு விடை கொடுத்திருந்தது. சர்மிரனின் பிரிவால் துயருறும் அவரது பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் அனைவரும் வழங்கி , அவர்களது துயரிலும் பங்கெடுத்திருந்தார்கள்.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாதிருக்க எவ்வகையான விழிப்புணர்வுகளும் , பாதுகாப்பு நடைமுறைகளும் சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதனை அனைவரும் உணர வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் பாடசாலைகள், பாலர்பாடசாலைகள், மற்றும் கிராம முன்னேற்றம் சார் சங்கங்களினூடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரிய தலைவர்கள், பொறுப்பானவர்கள் முன்வர வேண்டும்.