நான்கு வயதேயான பாலகன் தன் வயதினையொத்த நண்பர்களுடன் நந்தியாற்றில் விளையாடிய வேளை பரிதாபமாக நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
வட்டுவாகலைச் சேர்ந்த பிரபாபரன் நந்தினி தம்பதியரின் புதல்வனான சர்மிரன் எனும் பாலகனே இவ்வாறு விளையாடச் சென்றவேளை பரிதாபமாக நீரினால் காவுகொள்ளப்பட்டுள்ளான். 2012 ஆடிமாதம் 24ம் திகதி பிறந்த இச் சிறுவன் சாதிக்குமுன்பே காலனால் காவுகொள்ளப்பட்டமை மிகக் கொடூரமான வேதனையான விடயமாகும்.
சிறுவர்களின் விளையாட்டுத் தனம் , அசமந்தப் போக்கு ஆகியன கடைசியில் வினையாகி ஓர் சிறுவனின் உயிரைப் பலியெடுத்ததுடன் பெற்றோர்களினையும், உறவினர்களிளையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்தவேளையும் கவனமாகவும், அக்கறையுடனும், தமது கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் எல்லாப் பெற்றோருக்கும் அறிவுறுத்தியுள்ளது.