தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவம் தான் கிடைக்கவில்லை என்று தலையிலடித்துக் கொண்டால், மக்களுக்குச் சேவை செய்யும் அரச அதிகாரிகளும் சிங்களத் தலைமைகளால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை தளத்திற்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைக்கு பிரதேச மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் மக்களின் ஆதங்கத்தையும் , எதிர்ப்பையும் புரிந்துகொள்ளாத முல்லை அரச அதிபர் சிறுபிள்ளைத் தனமாக நீண்ட காலமாக காணிகள் அளவிடப்படாமல் இருப்பதாலும் எல்லைகளை கண்டறிவதில் பிரச்சனைகள் இருப்பதாலும் காணியை அளவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டமை வியப்பையும் நகைப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன்மிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் காணிகளை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு தொடர்ந்தும் அகதிகளாக வாழ முடியாது என சுட்டிக்காட்டிய வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் கடற்படைத் தளத்திற்கு 100 ஏக்கர் காணி போதாதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்
மக்களின் ஆதங்கத்தையும் இ எதிர்ப்பையும் அரச அதிகரிகளும் , சிங்களத் தலைமைகளும்எப்பொழுது தான் புரிந்து கொள்ளப்போகின்றார்களோ புரியவில்லை.?
நன்றி வீடியோ: IBCதமிழ்