வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சரஸ்வதி சிலைதிறப்பு விழா நிகழ்வு இன்றைய தினம் வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெட்டுவாய்க்கால் பாடசாலை அதிபர் திரு.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி உதயராணி முனீஸ்வரன் அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி அதிகாரி திரு புஸ்பகாந்தன் , பாடசாலைத் திட்டமிடல் அதிகாரி திரு நவநீதன், முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு ஜெயந்தன், சப்த கன்னிமார் ஆலயப் பூசகர் திரு பகீரதன், கிராம சேவகர் திரு ஜேசுரட்ணம், ஆகியோருடன் வட்டுவாகல் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் வட்டுவாகல் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

சரஸ்வதி சிலையினை நிறுவும் முழுச் செலவும் வட்டுவாகலைச் சேர்ந்த திரு நாகேந்திரம் சுகந்தன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது. திரு நாகேந்திரம் சுகந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி அவரது பெற்றோர்களால் இன்றையதினம் இச் சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களுக்குப் பாடசாலைச் சமூகம், வட்டுவாகல் கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.