பொங்கல், திருவிழா , விசேட விழாக் காலங்களில் வசந்தமண்டப எழுந்தருளி விக்கிரகங்களை உள்வீதி , வெளிவீதி உலாக் கொணர்ந்து பவனியாக வலம் வருகின்றமை பாரம்பரியம் மிக்கதும், விசேடமானதுமாகும். அதற்கு மிகவும் உறுதுணையாக வாகனங்கள் அமைகின்றன.
அந்தவகையில் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்துக்காக அன்னம் வடிவிலான வாகனம் வட்டுவாகலைச் சேர்ந்த திருமதி கணேசபாலன் அமிர்தாம்பிகை அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தையொட்டி முதன் முதலாக இவ்வாகனங்கள் வீதியுலாவுக்காகாப் பயன்படுத்தப்பட்டது.
வாகனத்தை அன்பளிப்பாக வழங்கிய திருமதி கணேசபாலன் அமிர்தாம்பிகை குடும்பத்தாருக்கு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய பரிபாலன சபையினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.