வட்டுவாகல்.கொம்: எமது நிலம் எமது கடல் எமக்கு வேண்டும். : வெடித்தது வட்டுவாகலில் போராட்டம் (படங்கள், வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

எமது நிலம் எமது கடல் எமக்கு வேண்டும். : வெடித்தது வட்டுவாகலில் போராட்டம் (படங்கள், வீடியோ)

Posted on
  • புதன், 19 ஏப்ரல், 2017
  • by
  • in
  • இறுதிக்கட்டப்  போரின்    பின்னர் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த     பல   பிரதேசங்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியிருந்தனர். முக்கியமாக      கேப்பாப்பிலவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால்    மற்றும் முல்லை கிளிநொச்சி  மாவட்டங்ளில் பல பிரதேசங்கள் இதில் உள்ளடங்குகிறது.
    ஏற்கனவே கேப்பாப்பிலவு மக்களின் அறப்போர் ஆரம்பமான நிலையில் இன்று வட்டுவாகல் , முள்ளிவாய்க்கால் மக்கள் இணைந்து வட்டுவாகலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது காணிகளை மீள கையளிக்குமாறு கோரி பொதுமக்கள் இன்று வட்டுவாகல் கடற்படையினரின் பிரதான முகாம் வாசலின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
    மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க     பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவமோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் மக்களுடைய காணி, கடல் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெருவித்து காளத்துக்கு விஜயம் செய்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.