வட்டுவாகல்.கொம்: பேரணியாகச் சென்று மகஜர் கையளிப்பு: நடவடிக்கை இன்றேல் மீண்டும் போராட்டம்: (படங்கள் வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பேரணியாகச் சென்று மகஜர் கையளிப்பு: நடவடிக்கை இன்றேல் மீண்டும் போராட்டம்: (படங்கள் வீடியோ)

Posted on
  • வெள்ளி, 21 ஏப்ரல், 2017
  • by
  • in
  • வட்டுவாகலில் பொதுமக்களுக்கு சொந்தமான ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்கக்கோரி கடந்த 19.04.2017 அன்று வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் மக்கள் ''எமது நிலம் எமது  கடல் எமக்கு வேண்டும்'' என்ற கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டு இருந்தனர்.
    அதன் ஒரு கட்டமாக இன்று காலை வட்டுவாகலில் இருந்து பேரணியாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருக்கிறது. இப் பேரணியானது வட்டுவாகல் பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு அரச அதிபர் பணிமனை வரை சென்று முடிவுற்றது. இதில் பெருமளவான மக்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவமோகன்  ஆகியோரும் பங்கேற்று மகஜரை வழங்கியிருந்தனர். 
    பதின்நான்கு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காது விடின் போராட்டம் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.