வட்டுவாகல் சப்த கன்னிமார் அருட்பாடல்கள் பற்றிய இரண்டாவது இசைத்தட்டுவெளியீடு எதிர்வரும் 10.05.2017 புதன்கிழமை வட்டுவாகல் ஆலய வளாகத்தில் ஆலயப்பரிபாலன சபையினரின் அனுசரணையுடனும், இசைத்தட்டு பாடல்களை ஒழுங்குபடுத்தி நெறியாள்கை செய்து வெளியிடும் வட்டுவாகலைச் சேர்ந்த திரு இந்திரராசா குடும்பபத்தினரின் பூரண அனுசரணையுடனும் வட்டுவாகல் சப்த கன்னிமாரின் திருவருளுடன் நடைபெறவுள்ளதால் அனைத்து அடியார்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கின்றார்கள்.
இது வட்டுவாகல் சப்த கன்னிமார்கள் பற்றிய இரண்டாவது இசைத்தட்டு தட்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாடல்களை வெளியிட அனுசரணை புரியும் திரு இந்திரராசா குடும்பத்தினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.