நூற்றாண்டு விழா மண்டப அடிக்கல் நாட்டு விழா இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ து.ரவிகரன், உதவி அரசாங்க அதிபர் குணபாலன், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி உ.புவனராஜ், கோட்டக்கல்வி அதிகாரி சிறி புஸ்பகாந்தன், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வட்டுவாகல் வாழ் புலம்பெயர் உறவுகளினால் இம்மண்டபம் அமைத்துக் கொடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். ஒற்றுமையுடன் இச் செயற்பாட்டை மேற்கொள்ளும் ''வட்டுவாகல் வாழ் புலம்பெயர் உறவுகளுக்கு'' மனமார்ந்த நன்றியினை வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து நிற்கின்றது. புலம்பெயர் உறவுகளின் பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றார்கள்