வட்டுவாகல் மண்ணில் இன்னுமொரு ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது. நாககன்னிகள் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு சமய அனுட்டானங்களுடன் நிறைவுபெற்றுள்ளது. முல்லை நகரத்துக்குச் செல்லும் பிரதான வீதிக்கருகாமையில் பழைய பாடசாலைக்கு அண்மித்ததாக இவ்வாலயம் அமையவிருக்கிறது. இந்நிகழ்விற்கு பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.