கொடூரமான கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகவல்லரசு நாடுகள் உட்பட அனைத்து உயிர்களும் பெரும் நெருக்கடியையும் பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளே இப்பிரச்சனையை தீர்க்கப் பெரும் பாடு பட்டுவரும் நிலையில் போரினால் பாதிப்படைந்து மீள எழ முடியாமல் தவிக்கும் எம் தாயக உறவுகள் ஊரடங்கு நிலையில் படும் துன்பங்களும் துயரங்களும் எண்ணிலடங்காதது.
இந்நிலையில் உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளின் பங்களிப்புடன் எம் கிராம உறவுகளுக்கு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அவுஸ்ரேலியா ¸ சுவிஸ்¸ பிரான்ஸ்¸ பிரித்தானியா¸ கனடா போன்ற நாடுகளிலிருந்து கட்டங்கட்டமாக நிவாரணப்பணிகள் தொடர்கின்றன. பங்களித்தோருக்கு நன்றிகள்
ஒருங்கிணைப்பாளர்களின் சிறப்பான செயற்பாடுகள்
தாயகத்தில் இவ் நிவாரணப் பணியை சிறப்புற ஒருங்கிணைத்துச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எமது கிராம விளையட்டுக்கழக உறுப்பிர்களும் நலன்விரும்பிகளும்.
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இச்செயற்பாட்டை திறம்படச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
1 Comments :
Great job. continue the help
கருத்துரையிடுக