வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல்2020 இன் ஆரம்ப நிகழ்வான பாக்குத் தெண்டல் நிகழ்வு இன்று இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 29.06.2020 அன்று தீர்த்தமெடுத்தல் நிகழ்வு இடம்பெறும்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நோற்பிருந்து 06.07.2020 அன்று பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏனைய விபரங்கள் வருமாறு
1. 22.06.2020 - பாக்குத்தெண்டல்
2. 29.06.2020 - தீர்த்தமெடுத்தல்
3. 06.07.2020 - பொங்கல் உற்சவம் இடம்பெறவிருக்கின்றது.
மேலும் நாட்டில் தற்பொழுது நிலவிவருகின்ற அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு சமூக இடைவெளி மற்றும் சுகாதார முறைமைக்கிணங்க பூஜைகள் யாவும் பாரம்பரிய முறையில் வழமை போல் இடம்பெறுவதோடு மட்டுப்படுத்தப்பட்ட அன்னதான சபையும் இடம் பெறும்.
இதை தவிர ஊர்த்தெண்டல், கடைத்தெண்டல், கலை நிகழ்வுகள் மற்றும் ஏனைய கழியாட்ட நிகழ்வுகள் என்பன இடம்பெறுவதற்கு தவிர்க்கவிடப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்திற்கென சேகரிக்கப்படும் வருமானம் இந்த வருடம் முற்றிலும் குன்றியுள்ளது. இதனால் பொங்கல் உற்சவ ரீதியில் மேலதிகமாக ஏற்படுகின்ற செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எவ்வாறெனில் பொங்கல் உற்சவ 08 நாட்களும் உற்சவ உபய காரர்கள் ஒவ்வொருவராலும் வழங்கப்படுகின்ற நிதியானது பொங்கல் பூஜை சார்ந்த செலவுகளை நிவர்த்தி செய்வதற்கு மட்டும் போதுமானளவாக காணப்படுகின்றது. இதை விட ஏற்படுகின்ற மண்பாண்ட செலவு, புதிய பாத்திரப் பொருட்கள் கொள்வனவு, பந்தல் வாடகை, மின்கட்டணம், சிற்றுண்டிச் செலவுகள், காகிதாகிச்செலவுகள், ஒளி ஒலி அமைப்பு செலவுகள் போன்ற செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலைமை இந்த வருடம் உருவாகியுள்ளது. எனவே இதனை கருத்திற் கொண்டு உறவுகளாகிய நீங்கள் எமது ஆலய பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவதற்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி- நிர்வாகம்.
தொடர்புகளுக்கு :- 077 9809303
077 0371689
நன்றி - தகவல் : சங்கீர்த் SPS
நன்றி - தகவல் : சங்கீர்த் SPS
0 Comments :
கருத்துரையிடுக