''வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்பது முதுமொழி. இன்றைய தகவல் தொழினுட்ப வளர்ச்சி¸ இலத்திரனியல் கருவிகளினுடைய பயன்பாடுகளினால் புத்தக வாசிப்பு என்பது மிக அரிதாக மாறிவிட்டது. இத்தகைய நிலையில் வாசிகசாலையின் தேவை கருதி அதனை மீள ஆரம்பிக்க எடுக்கும் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றிய அனுசரணையில் வருகின்ற 23/10/2020 காலை 11:00 மணியளவில் வட்டுவாகல் மண்ணில் மீண்டும் உதயமாகத் தயாராகின்றது வாசிகசாலை.
அண்மையில் கிராம இளைஞர்களினால் சிரமதானம்¸ புனருத்தான பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயாராகிவிட்டது வாசிகசாலை. கிராம மக்கள் அனைவரையும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றார்கள் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர்
0 Comments :
கருத்துரையிடுக