அருள் மிகு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தில் புனருத்தானப் பணிகள் ஆலய நிர்வாகத்தினரின் மேற்பார்வையில் இடையறாது நடைபெற்று வருகின்றது. பாலஸ்தானம் மேற்கொள்ளப்பட்டு ஆலயத்திற்கான புதிய கட்டடப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கட்டமானது ஆகம விதிகளுக்குட்பட்டு நவீனமாகவும் விரைவாகவும் நிவர்த்தி செய்யும் வகையில் மேலதிகமாக மூலஸ்தானம் மற்றும் சிற்ப செதுக்கல் பணிக்காக இந்தியா நாட்டினையும் எமது நாட்டினையும் சேர்ந்த சிற்பாச்சாரிமார்கள் அயராது பாடுபட்டு வருகின்றார்கள்.
தொடர்ந்து புனருத்தானப் பணிகள் விரைவாக நிறைவு பெறுவதற்கு அனைத்து அடியவர்களினதும் வட்டுவாகல் கிராம மக்களின் ஒத்துழை ப்பினையும் ஆலய நிர்வாகத்தினர் வேண்டி நிற்கின்றார்கள்.
பாடசாலைக் கட்டட பணியின் போது ஒன்றிணைந்து செய்பட்டது போல எம்து கிராமத்தின் ஆலய புனரமைப்பிலும் பங்களிக்க வேண்டப்படுகின்றது. ஏற்கனவே பலரது பங்களிப்புக்கள் கிடைக்கப்பெற்றதாக அறியக்கிடைக்கின்றது.
வட்டுவாகல் மக்களின் நிதிப் பங்களிப்பினை குறிப்பாக புலம்பெயர் வாழ் வட்டுவாகல் மக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு எதிப்பார்க்கப்படுகின்றது.
தொடர்புகளுக்கு
ஆலய பரிபாலன சபையினர்
வட்டுவாகல்
முல்லைத்தீவு
தலைவர் :திரு சிவானந்தராசா 0094779809303
செயலாளர் :திரு தர்ஸ்காந் 0094761512682
பிரதம குரு:திரு பகீரதன் 0094772977086
0 Comments :
கருத்துரையிடுக