வட்டுவாகல்.கொம்: உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்து லீக் சுற்றுக்குள் நுழைந்த உதயசூரியன் விளையாட்டுக் கழகம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்து லீக் சுற்றுக்குள் நுழைந்த உதயசூரியன் விளையாட்டுக் கழகம்

Posted on
  • ஞாயிறு, 4 ஏப்ரல், 2021
  • by
  • in
  • Tags
  •  வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில்  அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இன்று (04.04.2021)மோதியது. வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில்  இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. முடிவைத் தீர்மானிக்கும் தண்ட உதை முடிவில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


    வெற்றியீட்டிய வீரர்களுக்கும், அதற்காக உழைத்த பயிற்சியாளர்கள் கழக உறுப்பினர் அனைவருக்கும் வட்டுவாகல் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம். வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.