வட்டுவாகல்.கொம்: வட்டுவாகலில் வயோதிபர்களின் நலன் பேண உதயமாகின்றது ''நாகேஸ்வரி அறக்கட்டளை'':சிறந்த பணி
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகலில் வயோதிபர்களின் நலன் பேண உதயமாகின்றது ''நாகேஸ்வரி அறக்கட்டளை'':சிறந்த பணி

Posted on
  • திங்கள், 5 ஏப்ரல், 2021
  • by
  • in
  • Tags
  • பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்களினால் வயோதிபர்களின் நலன் பேணுவதற்கான  ''நாகேஸ்வரி அறக்கட்டளை''  வட்டுவாகலில் 05.04.2021 இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.



    வட்டுவாகலில் வாழ்ந்துவரும் 70 வயதுக்கு மேற்பட்ட வாழ்வாதார வசதி தேவைப்படுகின்ற அனைத்து  முதியவார்களும் பயன் பெறக்கூடிய ஏற்பாட்டினை முதன்மை நோக்கமாகக் கொண்டு இவ்வறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது அன்னையின் பெயரில் ''நாகேஸ்வரி அறக்கட்டளை''    ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். 
    திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்கள் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய இராஜ கோபுர கட்டுமானப் பணியை தனியொருவராக பொறுப்பேற்றுச் செயற்படுத்துவதனையயும் இங்கு குறிப்பிடவேண்டும். 

    அவரது இச் சிறந்த பணி தொடர எமது கிராமத்தின் சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .  

     நாகேஸ்வரி அறக்கட்டளை சிறப்பாகத் தனது பணியை ஆரம்பித்துச் செயற்படட்டும்.