வட்டுவாகல்.கொம்: மிடுக்குடன் மிளிரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்- மகா கும்பாபிஷேகத்திற்குத் தயார் (படங்கள்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

மிடுக்குடன் மிளிரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்- மகா கும்பாபிஷேகத்திற்குத் தயார் (படங்கள்)

Posted on
  • செவ்வாய், 11 மே, 2021
  • by
  • in
  • புனருத்தானப் பணிகள் நிறைவற்று புது  மிடுக்குடன் மிளிரும் முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை 12.05.2021 தொடக்கம் 14.05.2021 வரை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக (கொரோணா தொற்று) அடியவர்களின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    எண்ணைக் காப்புச் சாத்தும் நிகழ்விலும் பக்த அடியார்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை வேதனையளிக்கின்றது. ஆனாலும் கும்பாபிசேகத்தின் இறுதி நாள் நிகழ்வினை இணையவழியில் நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வட்டுவாகல் இணையத்திலிருந்து பக்த அடியார்கள் இந்நேரலையினைக் கண்டுகளிக்கலாம்.

    புதிதாக கன்னிமார் ஆலயத்தைப் புனரமைக்க பொருளாதார ரீதியாகவும், உடல் உழைப்பினையும் வழங்கிய உள்நாட்டு, புலம் பெயர் வாழ் உறவுகள் அனைவருக்கும் ஆலய பரிபாலன சபையினர் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.