இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பிரதான பல குருக்கள்மாரின் பங்களிப்புடன் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு இனிதே நிறைவு பெற்று தற்பொழுது ஏனைய அபிஷேக பூஜைகள், மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.
கும்பாபிஷேக நிகழ்வு நிறைவடைந்தவுடன் பிரமகுரு மற்றும் ஏனைய குருமார்களின் இறையாசியுரை இடம்பெற்றதுடன் தொடர்ந்து ஆலயத்தலைவர் மற்றும் எமது ஆலய பிரதம பூசகர் ஆகியோரின் நன்றியுரையும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குருமார்கள், எமது ஆலய பிரதம பூசகர் , ஆலயத்தலைவர், சிற்பசாரிமார்கள், கட்டுவேலையாளர் , மங்கள வாத்திய கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பாளர் போன்றோர்களை நிர்வாகத்தினராலும் பெரியோர்களினாலும் பொன்னாடை போர்த்தி அவர்களை வாழ்த்திக் கெளரவிக்கப்பட்டது. பின்னர் ஆலய பிரதம பூசகரினாலும் குருமார்களினாலும் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்தினர் அனைவரையும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டு நிகழ்வு நன்றியுடன் இனிதே நிறைவேறியது.
மேலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையால் இடம்பெற்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய முடியாத நிலமைக்கு எமது நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நாம் வருந்துகின்றோம். ஆனாலும் மூன்று நாட்கள் இடம்பெற்ற அனைத்து பூஜை நிகழ்வுகளும் படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இது இறுவட்டில் பதிவு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
நன்றி...
ஆலய பரிபாலன சபை
0 Comments :
கருத்துரையிடுக