எம் தாய் நிலத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலை நாம் அறிந்ததே. கொரொனாவின் தாக்கத்தால் அதன் மருத்துவ தேவைகளை நிவர்த்திக்க முடியாது வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. எம் தாய்நிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட (மாஞ்சோலை ) வைத்தியசாலையில் கொரொனாவினால் பாதிப்பற்ற நோயாளருக்குச் சுவாசிப்பதற்கு தேவையான வென்ரிலேற்றர் (Ventilator) வசதி ஒரு நோயாளருக்கு கூட இல்லாத நிலையில் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியை வைத்தியசாலை நிர்வாகமும் பணிப்பாளரும் நாடியுள்ளனர் . இதனைக்கருத்திற்கொண்டு வட்டுவாகல் உறவுகளிடமிருந்து கிடைக்கின்ற / சேகரிக்கப்படுகின்ற நன்கொடைப் பணத்தை வைத்தியசாலை நி்ர்வாகத்திடம் , முல்லைத்தீவு மருத்துவ சங்கமூடாக கையளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
‘’முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் DR. சோபன் அவர்களுடனான தொலைபேசி உரையாடலுக்கமைய ஒரு Ventilator பெறுமதி ரூபா 13,00000/= எனவும், நன்கொடையாக வழங்கப்படும் பணத்தை Mullaitivu medical association Account Number ற்கு வைப்பு செய்யுமாறும் குறித்த தொகை சேர்ந்த பின்பு வென்ரிலேற்ரரை உடனடியாக கொள்வனவு செய்து நோயாளரின் பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியுமென உறுதியளித்திருந்தார்’’. இதற்கான விலை கோரல் விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.
எமது இந்த சிறு உதவியின் மூலம் எமது உறவொன்றின் உயிர் காப்பாற்றப்படுமாயின் அது மிகச் சிறந்ததொன்றாக அமையும் . வட்டுவாகல் உறவுகள் அந்தந்த நாடுகளின் ஒன்றியங்களூடாகவோ அல்லது தாயகத்திலுள்ள வட்டுவாகல் நற்பணி மன்றமூடாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி இம் மகத்தான பணியில் கைகோற்குமாறு தயவுடன் வேண்டுகின்றோம்.
‘’சிறு துளி பெருவெள்ளமாகட்டும்’’
"நன்றி "
0 Comments :
கருத்துரையிடுக