வட்டுவாகல்.கொம்: கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்

Posted on
  • ஞாயிறு, 24 அக்டோபர், 2021
  • by
  • in
  • Tags ,
  • முல்லைத்தீவு வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட **விளாவூர் யுத்தம்** உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துள்ளது.
     இதனடிப்படையில் இன்றையதினம் மட்டுநகர் மண்ணில்  இறுதிப்போட்டியில் காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரை எதிர்த்து அனுபவீரர்  தீபனின்( கரும்புலி) நெறிப்படுத்தலின் கீழ் சுஜிகரன் தலைமையிலான எமது  அணி இறுதிப் போட்டியில் களம் கண்டது. 

    இப் போட்டியில் பல  ரசிகர்களின் மத்தியில் உத்வேகத்துடன் அபாரமாக விளையாடினார்கள். இறுதி நேரத்தில் இரு அணிகளும் எதுவித கோல்களும் பெறாத நிலையில் வழங்கப்பட்ட தண்ட உதை மூலம் ⚽6:5 என்ற கோல் கணக்கில் எதிரணி வெற்றியடைய 2ம் இடத்தினை எமது அணியினர் தனதாக்கி கொண்டனர்.  உண்மையில் இறுதி வரை மிகவும் சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்கும் கழகத்திற்கும் பெருமை தேடி தந்த எமது கழக வீரர்களுக்கும் வெற்றியீட்டிய காஞ்சீரங்குடா அணியினருக்கும் வட்டுவாகல் கிராமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    வெற்றிப் பயணம் தொடரட்டும் ……

    நன்றி :தகவல் சங்கீர்த்