அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.
பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு
மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.
நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.
அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.
எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.
புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று
வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும் வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.
இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி 05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது
https://www.vadduvakal.com/2020/01/blog-post.html
0 Comments :
கருத்துரையிடுக