வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக வெளி மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றியது. இதனடிப்படையில் இன்றையதினம் மட்டுநகர் மண்ணில் முதற்போட்டியில் வாகரை அகரமுதல்வன் அணியினரை எதிர்த்து சுஜிகரன் தலைமையிலான எமது அணி களம் கண்டது. இப் போட்டியில் உத்வேகத்துடன் அபாரமாக விளையாடிய எமது அணி வீரர்கள் முதல்பாதியாட்டத்தில் 03 கோலினையும் அடுத்த பாதியாட்டத்தில் 03 கோலினையும் அடித்து போட்டியின் முடிவில் ⚽6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியதற்கு வழிவகுத்தனர்.
இது ஒருபுறம் இருக்க இவ் வெற்றி பதிவானது இம் மைதானத்தை பொறுத்த வரையில் காலம் காலமாக வருடம்தோறும் போட்டிகள் இடம்பெற்று வந்த இவ் மைதானத்தில் அதிகூடிய 06⚽⚽⚽⚽⚽⚽ கோலினை பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளமை. எமது மாவட்டத்திற்கும் கழகத்திற்கும் பெருமையை தேடித்தந்துள்ளது.
வெற்றிப் பயணம் தொடரட்டும் ……
நன்றி :தகவல் சங்கீர்த்
0 Comments :
கருத்துரையிடுக