முல்லைத்தீவு, கிளிநொச்சி. மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பிரதேசத்தில் உதைபந்தாட்ட வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் நடாத்தப்பட்டு வருகின்ற வன்னி உதைபந்தாட்ட சமர்போட்டியானது 2022 ஆம் ஆண்டு எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக
வவுனியா லீக் 4
மன்னார் லீக் 3
மடுமாந்தை லீக் 3
கிளிநொச்சி லீக் 4
பூநகரி லீக் 2
முல்லைத்தீவு லீக் 8
அணிகள் என மொத்தமாக 24 அணிகள் விளையாடவுள்ளன.
போட்டிகள் எதிர்வரும் தை மாதம் 7, 8, 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. போட்டிகள் யாவும் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழக பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.
அந்தவகையில், எமது முல்லைத்தீவு லீக்கிலிருந்து பின்வரும் 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
01. உதயசூரியன் - செம்மலை
02. இளந்தென்றல் - அளம்பில்
03. அலையோசை
04. சென்யூட்
05. சந்திரன்
06. உதயசூரியன் - வட்டுவாகல்
07. சென்அன்ரனிஸ்
08. சுப்பேப்றாங்
மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்ற போட்டி என்பதனால் மாவட்ட அணிகள் யாவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு ஏனைய அணிகளுடன் சவாலாக விளையாடி உங்களதுதிறமைகளூடாக உங்களது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி. உதைபந்தாட்ட லீக் நிர்வாகம்.
போட்டி விதிமுறைகள்
போட்டிகள் யாவும் விலகல் முறையிலான போட்டிகளாக நடைபெறும்.
இறுதிப் போட்டி வரை போட்டிகள் யாவும் 15 - 15 என 30 நிமிடம் கொண்ட போட்டிகளாக நடைபெறும்.
இறுதிப் போட்டி
20 - 5 - 20 என்ற நேர அடிப்படையில் நடைபெறும்.
ஒவ்வொரு அணிகளும் உங்களது லீக்கிலிருந்து குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்படாத ஏனைய அணிகளிலிருந்து 4 வீரர்களை உங்களது அணியில் இணைத்து விளையாடலாம்.
ஆனால் மைதானத்தில் விளையாடும் போது ஏனைய கழக வீரர்கள் 4 பேரில் 3 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் மைதானத்தில் விளையாட முடியும்.
வளமையாக வன்னிச் சமர் போட்டிக்கு மத்தியஸ்தம் வழங்கும் நடுவர்களே நடுவர்களாககடமையாற்றுவார்கள்.
நன்றி.
உதைபந்தாட்ட லீக் நிர்வாகம்.
Thanks
Mr Sankeeth
Vadduvakal
0 Comments :
கருத்துரையிடுக