வட்டுவாகல்.கொம்: புதிய சீருடையுடன் '' மண்ணின் மைந்தர்கள் ''இறுதிப் போட்டியில் வட்டுவாகல் : அளம்பிலுடன் பலப்பரீட்சை
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

புதிய சீருடையுடன் '' மண்ணின் மைந்தர்கள் ''இறுதிப் போட்டியில் வட்டுவாகல் : அளம்பிலுடன் பலப்பரீட்சை

Posted on
  • வெள்ளி, 8 ஏப்ரல், 2022
  • by
  • in
  • Tags
  • 09.04.2022 நாளை  "மண்ணின் மைந்தர்கள்"  மாபெரும் வெற்றிக்கிண்ணத்தின்  இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழக மானது அளம்பில் இளந்தென்றலுடன் புதிய சீருடையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடைகளை  முன்னாள் இளம்வீரரும் தற்போது லண்டனில் வசித்துவரும் கழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான உதவிகளை வழங்கி வருபவருமான சண்முகலிங்கம் - சுகிர்தன் அவர்கள் வழங்கியுள்ளார். இவருக்கு எமது கழகம் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


    இறுதிப்போட்டியினை கண்டு களிப்பதற்கு பேரூந்து வசதிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.  நாளை பிற்பகல் 02.00 மணியளவில் சப்த கன்னிமார் ஆலயத்தின் முன்றலிருந்து பேரூந்து புறப்படவிருக்கின்றது என்பதனை அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் அறியத்தருகின்றோம்.



    நன்றி.

    உதயசூரியன் விளையாட்டுக் கழகம்.