மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிணத்திற்கான உதைபந்தாட்டப் போடிட்கள் செம்மலை விளையாட்டுக் கழகத்ததால் நடாத்தப்பட்டது. இதில் முல்லை மாவட்டத்தின் சிறந்த அணிகள் பங்குபற்றித் தமது திமையை வெளிப்படுத்தினர். இதன்
இறுதிப்போட்டி நேற்றையதினம் செம்மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் அணியினை எதிர்த்து அம்பில் இளந்தென்றல் அணி மோதியது.
மிகவும் விறுவிறுப்பான இறுதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக பெரு முயற்சியெடுத்தன. இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமநிலைத் தவிர்ப்பு தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இதில் அளம்பிலை வீழ்த்தி வட்டுவாகல் உதயசூரியன் அணி 4:2 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.. சிறப்பாக விளையாடி வட்டுவாகலுக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கும், சிறப்புடன் வழிநடத்தியோருக்கும் நல்வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.
*மண்ணின் மைந்தர்கள் நினைவுக் கிண்ணம் 2022*
🏆⚽🏆⚽🏆⚽🏆⚽🏆⚽
🥇🏆முதலாமிடம்:- உதயசூரியன் வி.கழகம், வட்டுவாகல்
🥈🏆இரண்டாமிடம்:- இளந்தென்றல் வி.கழகம், அளம்பில்
🏅🏆ஆட்டநாயகன்:- த.தமிழ்ச்செல்வன், உதயசூரியன் வி. கழகம், வட்டுவாகல்.
🏅🏆தொடராட்ட நாயகன் :- பிறேம்குமார் (பீமா) இளந்தென்றல் வி.கழகம்.
🎖️🏆சிறந்த கோல்காப்பாளர்:-
முஹமட் நப்ரீஸ், உதயசூரியன் வி. கழகம், வட்டுவாகல்
🏅🏆மக்கள் மனங்கவர் வீரன் :- ச. வேணுதாஸ், இளந்தென்றல் வி.கழகம், அளம்பில்
🏅🏆சிறந்த அணி:- உதயம் வி.கழகம், கள்ளப்பாடு
நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வட்டுவாகல்.கொம்
வட்டுவாகல் உதயசூரியன் கடந்து வந்த பாதை
செம்மலை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற ""மண்ணின் மைந்தர்கள் கிண்ணம் போட்டித் தொடரில் இரண்டாம் லீக்சுற்றில் குழுநிலை B பிரிவில் இடம்பிடித்த எமது அணி...
முதல் போட்டியில் புதுக்குடியிருப்பு சுப்பேப்றாங் அணியுடன் மோதி கோல் ஏதும் பெறாத நிலையில் போட்டி சமனிலை. (பெற்ற புள்ளி - 01)
இரண்டாவது போட்டியில் அளம்பில் இளந்தென்றல் அணியுடன் மோதி 2:0 கோல்கணக்கில் வெற்றி. ( பெற்றபுள்ளி -03)
மூன்றாவது போட்டி மாத்தளன் ஒற்றுமை அணி போட்டிக்கு கலந்து கொள்ளாத நிலையில் எமது அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது. ( பெற்ற புள்ளி- 03)
இதனடிப்படையில் முதலாவது தகுதிகாண் போட்டி முடிவு -27.03.2022
1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி நேரம் நிறைவு பெற்றது. பின்னர் நடைபெற்ற சமநிலைத் தவிர்ப்பு போட்டியில் 4:3 என்ற கோல் கணக்கில் வட்டுவாகல் உதயசூரியன் அணியினர் வெற்றி பெற்று மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்
0 Comments :
கருத்துரையிடுக