வட்டுவாகல்.கொம்: கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி சபைத் தேர்தல் : போட்டியிடும் வட்டுவாகல் மைந்தன்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி சபைத் தேர்தல் : போட்டியிடும் வட்டுவாகல் மைந்தன்

Posted on
  • சனி, 4 பிப்ரவரி, 2023
  • by
  • in
  •   முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டு மூலை வடக்கு பிரிவில் போட்டியிடும் வட்டுவாகல் மண்ணின் மைந்தனும் சிறந்த சமூக சேவையாளனுமாகிய திரு சிவராசா செந்தூர்ச்செல்வன்  அவர்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பிரதம வேட்பாளராக துவிச்சக்கர வண்டிச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.



    வட்டுவாகல் ,முள்ளிவாய்க்கால், வலைஞன் மடம், அம்பலவன் பொக்கணை , மாத்தளன், செம்மன்குன்று ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இப் பிரதேச சபையின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரையும் பெருமெடுப்பில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


    போர் முடியவடைந்து 13 வருடங்கள் கடந்தும் அடிப்படைக் கட்டமைப்புக்களின்றி அம்மணமாக நிற்கும் எங்கள் ஒவ்வாரு கிராமத்துக்கும் ''குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியான முதன்மைக் குறைபாடுகளின் உடனடித் தீர்வு'' என்பதை முன்னிறுத்தி மக்களிடம் வாக்குகளை வேண்டிநிற்கின்றார். 


    கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகளையும் அக்கட்சியினருக்கு வாக்களித்து எந்தப் பலாபலனையும் அடையாத நீங்கள் தனக்கு வாக்களிப்பதன் மூலம் தனது பங்கீட்டு ஒதுக்கீட்டு நிதியைச் சமமாக எல்லாக் கிராமங்களினதும் அடிப்படை வளர்ச்சிக்கு முழு வினைத்திறனுடன் பயன்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.