முல்லை உதைபந்தாட்ட லீக்கினால் 35 அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 07பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டித்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் *எமது அணி "இணைபிரியா நட்புறவான" கள்ளப்பாடு உதயம்* அணியினை எதிர்த்து விளையாடி போட்டி நிறைவில் 1:0 கோல்கணக்கில் வெற்றிபெற்று *வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சம்பியன் பட்டத்தினை* பெற்றுக்கொண்டது.
செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கோல் அடிக்கும் முனைவோடு சமபலத்துடன் இறுதிவரை சிறப்பாக விளையாடிய *"கள்ளப்பாடு உதயம் அணி "* வீரர்களுக்கும் வெற்றி முனைவோடு மிக உத்வேகத்துடன் விளையாடிய *எமது அணி* வீரர்களுக்கும் கழகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 Comments :
கருத்துரையிடுக