வட்டுவாகல்.கொம்: முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு : அன்பான அழைப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு : அன்பான அழைப்பு

Posted on
  • திங்கள், 29 மே, 2023
  • by
  • in
  •  


    ஜீவநதியின் 276 வெளியீடான முல்லை பொன்.புத்திசிகாமணியின் "சின்னாச்சி மாமி" சிறுகதைத் தொகுப்பு 01.06.2023ம் திகதி வட்டுவாகல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு அன்ரனி சுகிர்தன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

    பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.குணபாலன் அவர்கள் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துவார்.

    சிறப்பு விருந்தினராக கே.கே அருந்தவராசா
    (தமிழ் மணி,கலாபூசணம்,மேழிக்குமரன,எழத்தாளர்)
    அவர்கள் கலந்து கொள்கிறார்.
    இவர்களுடன் திரு.அ.இருதயநாதர்,(முன்னாள் அதிபர்)
    திரு.அந்தோனிப்பிள்ளை அன்ரனி(முன்னாள் தினபதி, சிந்தாமணி பத்திரிகை நிருபர் ,ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் கலந்து கொள்ளுவார்கள்.

    இது எனது புத்தகம்,எனது ஊரில் நானும் நிற்கிறேன்.அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.

    அன்புடன் பொன்.புத்திசிகாமணி