பிரித்தானிய வட்டுவாகல் உறவுகளுக்கு அன்பு வணக்கங்கள்.
மிக நீண்ட நாள் நோக்கம் ஒன்றினை நிறைவேற்றும் நெடிய பயணத்தின் ஆரம்பத்தினை உங்கள் வரவேற்புடனும் ஆதரவுடனும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
எம் உறவுகள் பலரது வேண்டுதலுக்கிணங்க பிரித்தானியாவில் வசிக்கின்ற வட்டுவாகல் உறவுகள் எல்லோரும் கலந்து உறவாடும் ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’’ ஒன்றினை நடாத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
இந்நிகழ்விலே பிரித்தானியாவில் வசிக்கின்ற வட்டுவாகல் உறவுகள் அனைவரும் குடும்பமாக கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டிநிற்கின்றோம்.
பிரித்தானியாவின் பல பகுதிகளிருந்தான போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு லெஸ்ரர் (Lester) நகரில் வருகின்ற 01-10-2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5மணிவரை இந் நிகழ்வை நடாத்த எண்ணியுள்ளோம்.
அத்துடன் பிரித்தானியாவைத் தவிர ஏனைய நாடுகளில் வசிக்கும் உறவுகளையும் இந் நிகழ்விலே கலந்து சிறப்பிக்க அன்பாக வரவேற்கின்றோம்.
எனவே இத்தகவலை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந் நிகழ்வு சிறப்படைய அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கின்றோம்.
இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இக் குழுமத்தில் உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். அத்துடன் இக்குழுமத்தில் இணைக்கப்படாத எம் உறவுகளின் தொடர்பு இலக்கங்களை தயவுடன் பொறுப்பானவர்களுக்கு வழங்கி அவர்களையும் இந்நிகழ்வில் பங்குபெற ஒத்தாசைபுரியுங்கள்.
இது தொடர்பில் பின்வருவோரைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பு விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
திரு சி.ரகுநாதன்
திரு செ.ஜெயம்
திரு ந.பிரபா
திரு நா.ஜெயராசா (சின்னவன்)
திரு செ. ஜெயரூபன்
நன்றி
நிகழ்வு ஏற்பாட்டுக் குழு.
0 Comments :
கருத்துரையிடுக