சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக்கழகம் முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளத்தின் அனுமதியுடன் வருடம் தோறும் பெருமையுடன் நடாத்தும் அமரர்களான வேலுப்பிள்ளை சோமசுந்தரம், கந்தசாமி பிரபாகரன் ஞாபகார்த்த சோ.சோமபாஸ்கரன் அவர்களின் நிதி அனுசரனையில் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 31.10.2024 இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் அணியை எதிர்த்து உடுப்புக்குளம் அலை ஓசை அணி் மோதினார்கள் ஆட்ட நேர முடிவில் பல சவாலுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு எமது அணியினர் விளையாடினார்கள் .
போட்டி தொடங்கி முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக பார்வையாளரை ஈர்க்கும் வகையில் போட்டி நடைபெற்று முடிவின் போது 3-0 என்ற கோல் கணக்கில் வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றி பெற்று மாபெரும் இறுதிப் போட்டியில் மகுடம் சூடியனார்கள்.
தொடர் ஆட்டநாயகன்- உதயசூரியன் வி.க சி.இன்சாத்
சிறந்த கோல் காப்பாளர்- உதயசூரியன் வி.க பு.அஜித்
.
கோல் விபரம்.
ச.சுஜிகரன்
மு.பவாஸ்
யுசேந்தன்
0 Comments :
கருத்துரையிடுக