வட்டுவாகல்.கொம்: உலக அளவிலான கராத்தே போட்டி 2024 (WUMS Champions - London) : பிரித்தானிய வட்டுவாகல் போட்டியாளர்கள் சாதனை
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

உலக அளவிலான கராத்தே போட்டி 2024 (WUMS Champions - London) : பிரித்தானிய வட்டுவாகல் போட்டியாளர்கள் சாதனை

Posted on
  • ஞாயிறு, 10 நவம்பர், 2024
  • by
  • in
  • Tags
  •  வட்டுவாகலைச் சேர்ந்த சுபாஸ்கரன், மனைவி றஜினி யின் பிள்ளைகளான மகள் சுவேதிகாவும், மகன் கிரிகரனும் 2024 ஆண்டுக்கான உலகளவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் (WUMS Champions - London) லண்டனில் இருந்து தெரிவாகி உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.






    இந்த போட்டியின் போது சுபாஸ்கரன் கிரிகரன் வெள்ளிப் பதக்கத்தையும், சுபாஸ்கரன் சுவேதிகா வெங்கலப் பதக்கத்தையும் பெற்று எமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  
    திரு சுபாஸ்கரன் வட்டுவாகலைச் சேர்ந்த காலஞ்சென்ற தருமலிங்கம் (முருகா) (மூத்த விளையாட்டு வீரர் ) அவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    பங்குபற்றி வெற்றியீட்டிய இரு மாணவார்களுக்கும்  எமது வட்டுவாகல் மக்கள் சார்பாக சிறப்பு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.