*தேசிய ஆக்கத்திறன் போட்டி*
கடந்த 09-12-2023 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற 2022-2023 ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் எமது சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி *செல்வி லோகேஸ்வரன் - எழிலினி* அவர்கள் எழுத்தாற்றலில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக் தெரிவாகியுள்ளார்.
அவருக்கு தேசிய விருது வழங்குவதற்காக எதிர்வரும் 23-11-2024 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும் படி அழைக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு அவரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
*பிரதேச மாவட்ட இலக்கிய விழா 2024*
பிரதேச மாவட்ட மற்றும் இலக்கிய விழா 2024 ம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் எமது சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவன் *செல்வன் ஜிந்துசன் சஞ்சீவன்* அவர்கள் பிரதேச மட்டத்தில் நடைபெற்ற நாட்டார் கதை ஆக்கப்போட்டியில் 1ம் இடத்தைப் பெற்றுப் பின் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுப் பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
அவரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பொறுப்பாசிரியர்
சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை
0 Comments :
கருத்துரையிடுக