வட்டுவாகல்.கொம்: துயர்பகிர்வு - அமார் சிவகுரு சீவரத்தினம் அவர்கள்-வட்டுவாகல் முல்லைத்தீவு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

துயர்பகிர்வு - அமார் சிவகுரு சீவரத்தினம் அவர்கள்-வட்டுவாகல் முல்லைத்தீவு

வட்டுவாகலை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு  , வட்டுவாகலை வசிப்பிடங்களாகவும்  கொண்ட சிவகுரு சீவரத்தினம் அவர்கள் 04/01/2021 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு புனிதம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும் , காலஞ்சென்றவர்களான தங்கராசா புஸ்பவதி ஆகியோரின் அன்பு மருமகனும் , குணபூசணியின்  பாசமிகு கணவரும் ,கணேசமூர்த்தியின் அன்பு சகோதரரும் , காலஞ்சென்ற லலிதாதேவி, குணபத்மினி ஆகியோரின் மைத்துனரும் சந்திரவதனா, சந்திரகலா, சந்திரமோகன் (ப.நோ.கூ.சங்கம் முல்லைத்தீவு), சந்திரபிரபா, சந்திரரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சந்திரன், பார்த்தீபன், செரின், புஸ்பானந்தன், ஜெகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் தயன்ஷி, சாகன்யா, ஷைந்தவி,சுலக்சனன், டிலுஜன், கரிஸ், ஜதுசன், ரிஷான், வினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 05/01/2021 செவ்வாய்க்கிழமை வட்டுவாகலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் வட்டுவாகல் இந்து மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்.

பூசணி : +94778622890 

மோகன்: +94772852876

ஜெகன் (மருமகன்) +447859147722