வட்டுவாகல்.கொம்: செய்திகள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொழும்பில் வட்டுவாகல் சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி எழிலினிக்கு விருது : படங்கள்

தேசிய ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபம்  நேற்று 21.12.2024 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது    எமது வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி ''லோகேஸ்வரன் எழிலினி'' அவர்கள் சாதனை புரிந்து சான்றிதழையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.


மேலும் வாசிக்க...

2024 பாதீட்டு நிதியில் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ சப்த கன்னிமார் அறநெறிக்குத் தளபாடங்கள் அன்பளிப்பு

*

         2024 பாதீட்டு நிதியில் எமது சப்த கன்னிமார் அறநெறி பாடசாலைக்கு உதவும் படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரியிருந்தோம்.



அவர்களுள் முந்நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு ஒன்றரை இலட்சம் (150000/=) ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகம் ஊடாக எமக்கு வழங்கியுள்ளார். 



அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைப் பாடசாலையின் சார்பாகவும் எமது மாணவர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்
மேலும் வாசிக்க...

திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை , வட்டுவாகலில் புதிய பாலம் : பிரதிஅமைச்சர் உபாலி உறுதி?

 திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி; புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு





மேலும் வாசிக்க...

தேசிய ஆக்கத்திறன் போட்டி , இலக்கிய விழா சாதனைகள் : வட்டுவாகல் அறநெறி மாணவர்கள்

 *தேசிய ஆக்கத்திறன் போட்டி*


கடந்த 09-12-2023 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற 2022-2023 ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் எமது சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி *செல்வி லோகேஸ்வரன் - எழிலினி* அவர்கள் எழுத்தாற்றலில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக் தெரிவாகியுள்ளார்.



மேலும் வாசிக்க...

அல்லைக்கிழங்கு: வட்டுவாகல் மண்ணின் அரிய வகை சுவைமிகு இன்னுமொரு வளம்


இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக  மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை  எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.  அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
மேலும் வாசிக்க...

வட்டுவாகலில் ஆலய பரிபாலன சபையினால் கும்மி அடித்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு

 
வட்டுவாகல் கிராமத்திற்கே  உரித்தானதும் பாரம்பரியம் ஆனதும்  ஆன கும்மி அடித்தல் நிகழ்வு நாளைய தினம்  ( 16/01/2022 திங்கள் கிழமை) வழமை போன்று நடைபெறும்

         மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

கடற்படையின் காணி அளவீட்டு முயற்சி: வட்டுவாகல் மக்களின் எதிர்ப்பால் இடை நிறுத்தம்!


 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ்மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி 07.06.2022 இன்று காணிகளுக்குரிய பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க...

5பில்லியன் ரூபாய்கள் செலவில் வட்டுவாகல் பாலம் விரைவில் நிர்மாணிப்பு: பா உ திரு சுரேன்ராகவன்


முல்லைத்தீவு வட்டுவாகல் புதிய பாலம் விரைவில் நிர்மாணிக்கப் படுமாம். சுமார் 5பில்லியன் ரூபாய்கள் செலவாகலாம் என உத்தேசம்.பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் தெரிவிப்பு!

அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.

பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு

மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.

நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.

அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.

எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.

புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று

வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும்  வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.

இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன். 

நன்றி.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.


இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி  05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது


https://www.vadduvakal.com/2020/01/blog-post.html








மேலும் வாசிக்க...

கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்

முல்லைத்தீவு வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட **விளாவூர் யுத்தம்** உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துள்ளது.
மேலும் வாசிக்க...

வெளி மாவட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடரின் முதல் போட்டியில் உதயசூரியன் வெற்றி


வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக வெளி மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றியது.
மேலும் வாசிக்க...

புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்




புதிதாக கட்டப்பட்ட  வட்டுவாகலில் அமைந்துள்ள  நாக கன்னிகள் ஆலயத்தில் நாளை ‘கும்பாபிசேகம்’ நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் வாசிக்க...

பல தசாப்தங்களின் பின் பொங்கலுற்ற வட்டுவாகல் இடிந்த பிள்ளையார் / கேணியடிப் பிள்ளையார்

 வட்டுவாகலில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் கோயில் புனருத்தானம்  பெற்று இன்று எழிமையாகப் பொங்கல் கண்டிருக்கின்றது. 


மேலும் வாசிக்க...

வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் மழுங்கிய துப்பாக்கி முனை: கைவிடப்பட்ட காணி அபகரிப்பு

 


"துப்பாக்கி முனையில் எமது வட்டுவாகல் கிராம மக்களுக்கு உரித்தான காணிகளை கையகப்படுத்த அரச தரப்பு மேற்கொண்ட பெரு முயற்சி வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் இன்று தடுக்கப்பட்டது "
மேலும் வாசிக்க...

இனிதே நிறைவுற்ற சப்தகன்னிமார் ஆலய மகா கும்பாபிஷேகம்: (படங்கள்)

இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பிரதான பல குருக்கள்மாரின் பங்களிப்புடன் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா   கும்பாபிஷேக நிகழ்வு  இனிதே நிறைவு பெற்று தற்பொழுது  ஏனைய அபிஷேக பூஜைகள், மண்டலாபிசேக  பூஜைகள்  இடம்பெற்று வருகின்றது.

மேலும் வாசிக்க...

வட்டுவாகலில் குண்டுவெடிப்பு: இளைஞன் பலி மற்றொருவர் படுகாயம்.

வட்டுவாகலில் இன்று (அக்கரையில் முள்ளிவாய்க்கால் பக்கமாக) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வட்டுவாகலைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகி இருக்கின்றார் மற்றொருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு மாஞ்சோலை  வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் பலியாகிய இளைஞர் சந்திரமோகன் நிசாந்தன் வயது 19 எனத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செல்லக்குமார் சயந்தரூபன் வயது 20  அனுமதிக்கப்பட்டுள்ளார்.





மேலதிக விபரங்கள் தரவேற்றப்படும்.

மேலும் வாசிக்க...

வட்டுவாகலில் வயோதிபர்களின் நலன் பேண உதயமாகின்றது ''நாகேஸ்வரி அறக்கட்டளை'':சிறந்த பணி

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்களினால் வயோதிபர்களின் நலன் பேணுவதற்கான  ''நாகேஸ்வரி அறக்கட்டளை''  வட்டுவாகலில் 05.04.2021 இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.



வட்டுவாகலில் வாழ்ந்துவரும் 70 வயதுக்கு மேற்பட்ட வாழ்வாதார வசதி தேவைப்படுகின்ற அனைத்து  முதியவார்களும் பயன் பெறக்கூடிய ஏற்பாட்டினை முதன்மை நோக்கமாகக் கொண்டு இவ்வறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது அன்னையின் பெயரில் ''நாகேஸ்வரி அறக்கட்டளை''    ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். 
திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்கள் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய இராஜ கோபுர கட்டுமானப் பணியை தனியொருவராக பொறுப்பேற்றுச் செயற்படுத்துவதனையயும் இங்கு குறிப்பிடவேண்டும். 

அவரது இச் சிறந்த பணி தொடர எமது கிராமத்தின் சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .  

 நாகேஸ்வரி அறக்கட்டளை சிறப்பாகத் தனது பணியை ஆரம்பித்துச் செயற்படட்டும்.



மேலும் வாசிக்க...

தமிழ் சைவ பக்திப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், பௌத்தமதக் காப்புரைகளா? : திரு ரவிகரன் காட்டம்

தமிழ் சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும்  ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்தில் 25.02நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரவிகரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வட்டுவாகல் ஒரு தனித் தமிழ் சைவக் கிராமமாகும். இந்த கிராமத்தில் தற்போது சத்தமில்லாதவகையில் பல வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேலோங்கிவருகின்றன.

அந்த வகையில் அங்கு கோத்தபாய கடற்படைத் தளம் என்னும் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டுவாகல் அக்கரையில், வடக்காறுப் பகுதிக்கு எவரும் மீன்பிடிச் செயற்பாட்டிற்குச் செல்ல முடியாதவாறு 670ஏக்கர், 03றூட், 10பேச் காணியினை கடற்படையினர் அபகரித்துள்ளனர்.

இதுதவிர வட்டுவாகல் இக்கரையிலும் வடக்காறுப் பக்கமாக கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து அங்கு இராணுவமுகாம் அமைக்கப்பட்டதோடு மாத்திரமின்றி, பாரிய பௌத்த விகாரையும் அங்கு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

அத்தோடு நந்திக்கடலும், நந்திக்கடலோடு சேர்ந்த வயல்நிலங்கள், நிலப்பகுதிகளை உள்ளடக்கி வனஜீவராசிகள் திணைக்களம் ஏறத்தாள 10250ஏக்கர், அதாவது 4141.67ஹெக்டயர் நிலத்தினை தங்களுடைய ஆளுகைக்குள் கெண்டுவந்திருக்கின்றார்கள்.

இந்தவகையில் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என அரச இயந்திரங்கள் வட்டுவாகல் பகுதியில் தமது ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

அதேவேளை இப்பகுதி பகுதிமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில், சிங்கள பௌத்த குடும்பங்களே இல்லாத இந்த வட்டுவாகல் கிராமத்தில் பௌத்த விகாரை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையில் பௌத்த மத காப்புரைகள் காலையும் மாலையும் வட்டுவாகல் கிராமம் பூராகவும் ஒலிபெரிக்கியூடாக ஒலிபரப்பப்படுகின்றது. அதாவது பௌத்த மதக் காப்புரைகள் அங்கு ஆக்கிரமிப்பு உரைகளாக அங்கு ஒலிக்கவிடப்படுகின்றன.
ஒரு தனித் தமிழ் சைவக் கிராமத்தில் இப்படியானதொரு பௌத்த மத ஆக்கிரமிப்பு இடம்பெறுவதுடன் கடற்படை, இராணுவம் வனஜீவராசிகள் என்பவற்றாலும் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவருவதால், வட்டுவாகல் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் கூனிக் குறுகிப்போய் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் சைவ இறைஇசைப் பாடல்கள் ஒலித்துவந்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மத காப்புரைகள் ஆக்கிரமித்துள்ளன - என்றார்
மேலும் வாசிக்க...

உதயமாகியது வட்டுவாகலில் நற்பணி மன்றம்: கிராம மக்களின் அமோக வரவேற்பு

வட்டுவாகலில் நற்பணி மன்றமானது உருவாக்கப்பட்டு இன்று தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தாயகத்திலுள்ள , புலம்பெயர்ந்து வாழும் வட்டுவாகல் உறவுகள் ஒன்றித்து இச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.  தாயகத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த நிர்வாகத்தினருடன் , புலம்பெயர்ந்து வாழும் அனைத்து வட்டுவாகல் உறவுகளும் ஒன்றாகப் பயணித்து இவ் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் மேலும் வலுச்சேர்ப்பதாக அமைகின்றது. 

எமது கிராமத்தின், கிராம மக்களின்  அத்தியாவசிய, அடிப்படைத்தேவைகள் முதற்கட்டமாகத் தீர்க்கப்படவுள்ளது. அரசாங்கத்தினரின் செயற்பாடுகளை, அதன் உதவியை  மட்டும் எதிர்பாராமல் தாயகத்திலும் , புலம்பெயர்தேசங்களிலும் வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் இச் செயற்பாடுகள் மேன்மேலும் விரிந்து செல்லவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் தேவையாகவும் அமைகின்றது.

இச் செயற்பாடுகளில் தாயகத்திலோ அல்லது புலம்பெயர் தேசங்களிலோ எம்முறவுகள் இணைய விரும்பினால் தயவுசெய்து கீழ் உள்ள பொறுப்பானவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.


இணைப்பாளர் - திரு குணநேசன் (ஆசிரியர்) 0094 77 603 3938

தலைவர் - திரு செந்தூர்ச்செல்வன்  0094 75 610 4330


''ஒற்றுமையே எமது பலம்''


மேலும் வாசிக்க...

சப்த கன்னிமார் ஆலய புனரமைப்பு : வட்டுவாகல் மக்களை ஒன்றிணையுமாறு அன்பான அழைப்பு

அருள் மிகு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தில் புனருத்தானப் பணிகள் ஆலய நிர்வாகத்தினரின் மேற்பார்வையில் இடையறாது நடைபெற்று வருகின்றது. பாலஸ்தானம் மேற்கொள்ளப்பட்டு ஆலயத்திற்கான புதிய கட்டடப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் வாசிக்க...

வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி: விபரம்

முல்லைத்தீவு வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் இந்தவருடம் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில்  இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். 


செல்வி சுதன் குஜின்சினி           173 புள்ளிகள்


செல்வன் ஜிந்துசன் சன்சீவன்  170 புள்ளிகள்


ஆகிய இருமாணவர்களும் இந்தவருடம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில் வட்டுவாகல் அ.த.க பாடசாலை க்கும் ,எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.  சித்தியடைந்த இரு மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இவ்வடைவினை அடையப்பாடுபட்டு வழிகாட்டடிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் எம்  கிராம மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாடசாலையின் வெற்றிப் பயணம் தொடரட்டும். 

மேலும் வாசிக்க...