வட்டுவாகல்.கொம்: பாடசாலை
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..
பாடசாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடசாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளி மாணவர்களுக்கான பிரியாவிடை - படங்கள்

  வட்டுவாகல் அலெக்ஸ் முன்பள்ளியில் கல்விகற்று தரம் 1 இற்கு மு/ வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வுகள் 01.04.2023 இன்று சிறப்பாக நடைபெற்றது.

தரம் 1இல் காலடி எடுத்துவைக்கும் மாணவார்களின் எதிர்காலம் சிறக்க நல் வாழ்த்துக்கள்.

அந்நிகழ்வின் சில பதிவுகள்......


மேலும் வாசிக்க...

வெட்டுவாய்க்கால் பாடசாலையில் புலமைப்பரீட்சையில் உயர் பெறுபேறு: கல்வியமைச்சினால் ஆசிரியர் கௌரவிப்பு



2020 ஆம் ஆண்டு முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் பாடசாலையில் தரம்  ஐந்து புலமைபரிட்சை எழுதிய மாணவர்களில் 92% மாணவர்கள் 100 வீதம்  புள்ளிகளை பெற்றுள்ளார்கள். இதற்காக வடமாகணகல்வி அமைச்சினால் வகுப்பாசிரியர் திருமதி அருள்மலர்றாஜி அமலராசா அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
                               இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் காலத்தில் எமது இளைய சமுதாயம்  இன்னும் முன்னேற முழுமையான முயற்சியை செய்வோமாக


மேலும் வாசிக்க...

வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி: விபரம்

முல்லைத்தீவு வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் இந்தவருடம் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில்  இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். 


செல்வி சுதன் குஜின்சினி           173 புள்ளிகள்


செல்வன் ஜிந்துசன் சன்சீவன்  170 புள்ளிகள்


ஆகிய இருமாணவர்களும் இந்தவருடம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில் வட்டுவாகல் அ.த.க பாடசாலை க்கும் ,எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.  சித்தியடைந்த இரு மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இவ்வடைவினை அடையப்பாடுபட்டு வழிகாட்டடிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் எம்  கிராம மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாடசாலையின் வெற்றிப் பயணம் தொடரட்டும். 

மேலும் வாசிக்க...

வட்டுவாகல் அ.த.க பாடசாலையின் நூற்றாண்டு விழா சதுரங்கப் போட்டி முடிவுகள் (படங்கள்)

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டுவாகல் அ.த.க பாடசாலையால் நடாத்தப்பட்ட முல்லைத்தீவு வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இச் சதுரங்கப் போட்டிகளில் முல்லைவலயத்துக்குட்பட்ட பெருமளவான பாடசாலை மாணவ மாணவியர் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.  இந்நிகழ்வைத் திறம்பட நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
மேலும் வாசிக்க...

நூற்றாண்டு விழா மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் (படங்கள்)

மேலும் வாசிக்க...

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  முல்லை வலயப்   பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியினை நடாத்த வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரைப் போட்டியானது கீழ்ப் பிரிவு,  இடைநிலைப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிடையே நடாத்தப்படவுள்ளது.  தரம் 6,7,8 ஆகியன கீழ்ப் பிரிவிலும் 9 ,10, 11 இடைநிலைப் பிரிவிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆக்கங்கள் அனுப்பப்படுவதற்கான இறுதித் திகதி  09.06.2017 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

முல்லை வலய பாடசாலை மாணவர்களை பெருமளவில் பங்கேற்று பரிசில்களை தட்டிச் செல்லுமாறு பாடசாலை மாணவர்களுக்கு வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் அழைப்பை விடுக்கிறார்கள்.



மேலும் வாசிக்க...

புலம்பெயர் வாழ் உறவுகளுக்கு வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் விடுக்கும் அன்பான வேண்டுதல் (வீடியோ)

வட்டுவாகல் பாடசாலையானது இவ்வருடம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் எமது கிராமப் பாடசாலையானது நூற்றாண்டு விழாவைக் காண்கின்றது எனும் சந்தர்ப்பமானது கிராமத்துக்கும், மக்கள் ஒவ்வொருவருக்கும் கௌரவத்தினையும் பெருமையையும் கொடுத்துள்ளது. இம் மகிழ்வான சந்தர்ப்பத்தில் நூற்றாண்டு விழாவை பாடசாலைச் சமூகத்துடன் கைகோர்த்துச் சிறப்பிக்க வேண்டிய தேவை கிராம வாழ் மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். 
வெட்டுவாய்க்கால் பாடசாலையானது இடப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களினால் 12 வருடங்களுக்கு முன்னர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டமை எல்லோரும் அறிந்த விடயமாகும். இறுதிக் கட்டப் போரின் அனைத்து வடுக்களையும் தன்னுள்ளே சுமந்து மெதுவாக எழுந்து நிற்க எத்தனிக்கின்றது எமது கிராமம். பாடசாலையைப் பொறுத்தவரை பல அடிப்படைத் தேவைகள் அற்ற நிலையிலேயே இயங்கி வருகின்றது. தரம் 9 வரை தரமுயர்த்தப்பட்டுள்ள எமது பாடசாலையினது சில தேவைகளையேனும் நாம் பூர்த்தி செய்து எமது கிராமக் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏற்ற சமூகமானதும் பாதுகாப்பானதுமான சூழலை உருவாக்கிக் கொடுக்க ஒற்றுமையுடன் ஒன்றிணைவோம். குறிப்பாகப் புலம் பெயர் வாழ் உறவுகளிடமிருந்து நிதிப் பங்களிப்பை எமது பாடசாலைச் சமூகம் எதிர்பார்த்து நிற்கின்றது. பாடசாலைச் சமூகத்தினது பிரதான வேண்டுதல்களாக  

1) மேடையுடன் கூடிய கேட்போர் கூடம்.
2) நூலக கட்டடம், நூல்கள் , கணணி வசதி
3) சுற்று மதில் (குறிப்பாக இந்து மயானப் பகுதியில் நடப்பவற்றை மறைத்தல்)

எவ்வகையான தேவைகள் , பாடசாலையின் தற்போதய நிலை, மாணவர்களின் அடைவுகள், எதிர்காலச் செயற்பாடுகள் எனச் சிலவற்றை விளக்குகிறார்கள் வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகத்திலிருந்து மாணவர், ஆசிரியர், அதிபர் ஆகியோர்கள்.

 

'ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்கு ஒன்றிணைவோம். இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள்.'

பிரித்தானியாவில் ஒருங்கிணைப்புக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு 

ரூபன்      00447413690174
உதயன் 00447482029292


மேலும் வாசிக்க...

வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலையில் நடைபெற்ற சரஸ்வதி சிலை திறப்பு விழா : (படங்கள்வீடியோ )

வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சரஸ்வதி சிலைதிறப்பு விழா நிகழ்வு இன்றைய தினம் வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
மேலும் வாசிக்க...

சரஸ்வதி சிலைக்கான அத்திவாரமிடலும், பாடசாலை உபாரணங்கள் கையளிப்பும் (படங்கள்)

வெட்டுவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சரஸ்வதி சிலைக்கான அத்திவாரமிடல் நிகழ்வும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வும் இன்றைய தினம் வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
மேலும் வாசிக்க...