கடும் மழை : முகத்துவாரம் தானாக உடைத்து பாய்கின்றது நந்தி ஆறு
அதிக மழையினால் சடுதியாக நீர்மட்டம் அதிகரித்ததனாலேயே ஆறு தானாக உடைப்பெடுத்து பாய்கின்றது.
மேலதிக விபரங்கள் , படங்கள் தரவேற்றப்படும்
5பில்லியன் ரூபாய்கள் செலவில் வட்டுவாகல் பாலம் விரைவில் நிர்மாணிப்பு: பா உ திரு சுரேன்ராகவன்
அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.
பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு
மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.
நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.
அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.
எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.
புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று
வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும் வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.
இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி 05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது
https://www.vadduvakal.com/2020/01/blog-post.html
புதிதாக கட்டப்பட்ட நாக கன்னிகள் ஆலய கும்பாபிசேகம் : படங்கள்
வட்டுவாகலில் அமைந்துள்ள நாக கன்னிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு கடந்த இரு நாட்களாக கும்பாபிசேகம் நடைபெற்று வருகின்றது.
கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்
வெளி மாவட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடரின் முதல் போட்டியில் உதயசூரியன் வெற்றி
புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்
பல தசாப்தங்களின் பின் பொங்கலுற்ற வட்டுவாகல் இடிந்த பிள்ளையார் / கேணியடிப் பிள்ளையார்
வட்டுவாகலில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் கோயில் புனருத்தானம் பெற்று இன்று எழிமையாகப் பொங்கல் கண்டிருக்கின்றது.
வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் மழுங்கிய துப்பாக்கி முனை: கைவிடப்பட்ட காணி அபகரிப்பு
‘’உயிர் காக்க ஒன்றிணைவோம்’’ : சிறு துளி பெருவெள்ளமாகட்டும்
எம் தாய் நிலத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலை நாம் அறிந்ததே. கொரொனாவின் தாக்கத்தால் அதன் மருத்துவ தேவைகளை நிவர்த்திக்க முடியாது வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. எம் தாய்நிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஊரடங்கு வேளையில் பொறுப்புடன் செயற்பட்ட நற்பணி மன்றம் :இளைஞர்களும் புலம்பெயர் உறவுகளும் கைகோற்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலீஸ் பிரிவினை கொண்ட இரண்டு பிரதேச செயலகங்கள் கடந்த 17.05.21 நள்ளிரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை நாம் அறிந்ததே.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இராணுவம் , பொலிஸ் ஆகியோரின் தடைகளுக்குமத்தியிலும் வட்டுவாகல் நற்பணி மன்றத்தினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு எமது கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான பணியில் புலம்பெயர் வாழ் உறவுகளுடைய பங்களிப்புடன் எமது கிராமத்தின் இளைஞர்களினால் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டது. சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு இப்பணியை நிறைவேற்றிய வட்டுவாகல் நற்பணி மன்றத்துக்கும் , பொறுப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கிராம மக்கள் சார்பாகத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகள்.
இனிதே நிறைவுற்ற சப்தகன்னிமார் ஆலய மகா கும்பாபிஷேகம்: (படங்கள்)
இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பிரதான பல குருக்கள்மாரின் பங்களிப்புடன் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு இனிதே நிறைவு பெற்று தற்பொழுது ஏனைய அபிஷேக பூஜைகள், மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.
மிடுக்குடன் மிளிரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்- மகா கும்பாபிஷேகத்திற்குத் தயார் (படங்கள்)
வெட்டுவாய்க்கால் பாடசாலையில் புலமைப்பரீட்சையில் உயர் பெறுபேறு: கல்வியமைச்சினால் ஆசிரியர் கௌரவிப்பு
வட்டுவாகலில் குண்டுவெடிப்பு: இளைஞன் பலி மற்றொருவர் படுகாயம்.
மேலதிக விபரங்கள் தரவேற்றப்படும்.
வட்டுவாகலில் வயோதிபர்களின் நலன் பேண உதயமாகின்றது ''நாகேஸ்வரி அறக்கட்டளை'':சிறந்த பணி
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்களினால் வயோதிபர்களின் நலன் பேணுவதற்கான ''நாகேஸ்வரி அறக்கட்டளை'' வட்டுவாகலில் 05.04.2021 இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவரது இச் சிறந்த பணி தொடர எமது கிராமத்தின் சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
நாகேஸ்வரி அறக்கட்டளை சிறப்பாகத் தனது பணியை ஆரம்பித்துச் செயற்படட்டும்.
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்து லீக் சுற்றுக்குள் நுழைந்த உதயசூரியன் விளையாட்டுக் கழகம்
வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இன்று (04.04.2021)மோதியது. வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. முடிவைத் தீர்மானிக்கும் தண்ட உதை முடிவில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழ் சைவ பக்திப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், பௌத்தமதக் காப்புரைகளா? : திரு ரவிகரன் காட்டம்
உதயமாகியது வட்டுவாகலில் நற்பணி மன்றம்: கிராம மக்களின் அமோக வரவேற்பு
வட்டுவாகலில் நற்பணி மன்றமானது உருவாக்கப்பட்டு இன்று தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தாயகத்திலுள்ள , புலம்பெயர்ந்து வாழும் வட்டுவாகல் உறவுகள் ஒன்றித்து இச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. தாயகத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த நிர்வாகத்தினருடன் , புலம்பெயர்ந்து வாழும் அனைத்து வட்டுவாகல் உறவுகளும் ஒன்றாகப் பயணித்து இவ் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் மேலும் வலுச்சேர்ப்பதாக அமைகின்றது.
எமது கிராமத்தின், கிராம மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத்தேவைகள் முதற்கட்டமாகத் தீர்க்கப்படவுள்ளது. அரசாங்கத்தினரின் செயற்பாடுகளை, அதன் உதவியை மட்டும் எதிர்பாராமல் தாயகத்திலும் , புலம்பெயர்தேசங்களிலும் வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் இச் செயற்பாடுகள் மேன்மேலும் விரிந்து செல்லவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் தேவையாகவும் அமைகின்றது.
இச் செயற்பாடுகளில் தாயகத்திலோ அல்லது புலம்பெயர் தேசங்களிலோ எம்முறவுகள் இணைய விரும்பினால் தயவுசெய்து கீழ் உள்ள பொறுப்பானவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.
இணைப்பாளர் - திரு குணநேசன் (ஆசிரியர்) 0094 77 603 3938
தலைவர் - திரு செந்தூர்ச்செல்வன் 0094 75 610 4330
''ஒற்றுமையே எமது பலம்''
சப்த கன்னிமார் ஆலய புனரமைப்பு : வட்டுவாகல் மக்களை ஒன்றிணையுமாறு அன்பான அழைப்பு
அருள் மிகு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தில் புனருத்தானப் பணிகள் ஆலய நிர்வாகத்தினரின் மேற்பார்வையில் இடையறாது நடைபெற்று வருகின்றது. பாலஸ்தானம் மேற்கொள்ளப்பட்டு ஆலயத்திற்கான புதிய கட்டடப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு: பிரான்ஸ் ஒன்றியம்
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி முகக்கவசங்களை வழங்கி உதவிய பிரான்ஸ் ஒன்றிய உறுப்பினர்களுக்கும், பாடசாலையின் ஒரு பகுதி வேலியை சிரமதான அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி: விபரம்
முல்லைத்தீவு வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் இந்தவருடம் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
செல்வி சுதன் குஜின்சினி 173 புள்ளிகள்
ஆகிய இருமாணவர்களும் இந்தவருடம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில் வட்டுவாகல் அ.த.க பாடசாலை க்கும் ,எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சித்தியடைந்த இரு மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இவ்வடைவினை அடையப்பாடுபட்டு வழிகாட்டடிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் எம் கிராம மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பாடசாலையின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
வட்டுவாகலில் சிறப்புடன் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலை: படங்கள்
பிரான்ஸ் ஒன்றிய அனுசரணையில் வட்டுவாகல் மண்ணில் மீண்டும் உதயமாகின்றது வாசிகசாலை
''வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்பது முதுமொழி. இன்றைய தகவல் தொழினுட்ப வளர்ச்சி¸ இலத்திரனியல் கருவிகளினுடைய பயன்பாடுகளினால் புத்தக வாசிப்பு என்பது மிக அரிதாக மாறிவிட்டது. இத்தகைய நிலையில் வாசிகசாலையின் தேவை கருதி அதனை மீள ஆரம்பிக்க எடுக்கும் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றிய அனுசரணையில் வருகின்ற 23/10/2020 காலை 11:00 மணியளவில் வட்டுவாகல் மண்ணில் மீண்டும் உதயமாகத் தயாராகின்றது வாசிகசாலை.
அண்மையில் கிராம இளைஞர்களினால் சிரமதானம்¸ புனருத்தான பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயாராகிவிட்டது வாசிகசாலை.வட்டுவாகல் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
கடந்த 02ஆம் திகதியன்று மீன்பிடி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாரா நிறுவனத்தால் நந்திக்கடலை ஆழமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கபடவிருந்த நிலையில் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவால் அந்த நடவடிக்கை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக முல்லைத்தீவுக்கு வருகைதந்திருந்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தலுக்கு முன்னர் வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என மீனவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆழப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருந்த நிலையிலேயே தேர்தல் முடியும் வரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போருக்கு பின்னர் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்று பகுதி சேறுகள் நிறைந்து நிரம்பியதால் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் அதனை ஆழப்படுத்தி தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது
நன்றி தமிழ்வின்